விவேக் கடைசியாக நடித்த படம் இதுதான்.. வைரலாகும் லெஜன்ட் சரவணா போட்டோஸ்!
சென்னை: மறைந்த நடிகர் விவேக் கடைசியாக நடித்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
நடிகர் விவேக் 1987ஆம் ஆண்டு வெளியான மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார் விவேக். ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார்.

ஹேட்டர்ஸே இல்லாத நடிகர்
ஹேட்டர்ஸே இல்லாத நடிகரான விவேக்கின் மரணம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் உலுக்கியுள்ளது. நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தார். பல படங்களில் ஹீரோவுக்கு இணையாக ட்ராவல் செய்துள்ளார்.

ஹீரோ விவேக்
கடைசியாக அவரது நடிப்பில் தாராள பிரபு படத்தில் நடித்தார். கண்ணதாசன் என்ற கேரக்டரில் மருத்துவராக நடித்திருந்தார் நடிகர் விவேக். அவரது கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. படத்தின் ஹீரோவே விவேக்தான் என்று சொல்லும் அளவுக்கு இருந்தது அவரது நடிப்பு.

கடைசியாக நடித்த படம்
மேலும் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்திலும் நடித்துள்ளார். ஆனால் இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் விவேக் கடைசியாக நடித்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வெளியான போட்டோக்கள்
அதாவது, லெஜண்ட் சரவணா ஸ்டோர் சரவணன் அருள் நடிக்கும் படத்தில் நடித்துள்ளார் நடிகர் விவேக். ஏற்கனவே குலு மணாலியில் நடிகர் விவேக், லெஜண்ட் சரவணா ஸ்டோர் அருளுடன் படப்பிடிப்பில் பங்கேற்ற போட்டோக்கள் வெளியானது.

இன்று காலை மரணம்
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று கும்பகோணத்தில் நடைபெற இருந்த நிலையில் விவேக் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. நடிகர் விவேக் மீண்டு வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை காலமானார்.


Click it and Unblock the Notifications