twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்துல் கலாம் 88 ஆவது பிறந்த நாள் - விவேக் மூலம் ட்ரெண்டான #plantforkalam

    |

    சென்னை: அப்துல் கலாமின் பிறந்த நாளை ஒட்டி நடிகர் விவேக் #plantforkalam என்று ஒரு ஹேஷ்டேக் உருவாக்கினார். மரம் நடுவதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதை ட்ரெண்ட் ஆக்கும் படி மக்களுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார். அவரின் கோரிக்கைக்கு இணங்க மக்களும் அவரது ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்தனர். சிலமணி நேரங்களிலேயே அது உலகளவில் ட்ரெண்ட் ஆனது.

    மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 88ஆவது பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூரும் வகையில் நடிகர் விவேக் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த மரம் நடும் நிகழ்ச்சி சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அரசினர் மேல் நிலை பள்ளியில் இன்று நடைபெற்றது. அந்த விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    Actor Vivek’s #plantforkalam hashtag going on worldwide trend

    அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதிஅப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி

    மறைந்தாலும் நம் மனங்களை விட்டு நீங்காத ஏ.பி.ஜே.அப்துல் கலாமோடு நெருங்கி பழகிய நடிகர் விவேக். அப்துல் கலாம் ஐயாவின் சொல்படி 1 கோடி மரக்கன்றுகளை நட்டு வைக்கும் திட்டத்தில் இதுவரையில் பல லட்சம் மரக்கன்றுகளை கிரீன் கலாம் என்ற தொடங்கப்பட்ட அமைப்பு மூலம் நட்டு விட்டார். மேலும் பல மரங்களை தொடர்ந்து நடவுள்ளார்.

    அந்த வகையில் அப்துல் கலாமின் பிறந்த நாளை ஒட்டி நேற்று சமூக வலைதளங்களில் #plantforkalam என்று ஒரு ஹேஷ் டாக் உருவாக்கினார். விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதை ட்ரெண்ட் ஆக்கும் படி மக்களுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார். அவரின் கோரிக்கைக்கு இணங்க மக்களும் அவரது ஹேஷ் டாக்கை ட்ரெண்ட் செய்தனர். சிலமணி நேரங்களிலேயே அது உலகளவில் ட்ரெண்ட் ஆனது.

    நடிகர் விவேக்கின் இந்த மரம் நடும் சேவையை பல பிரபலங்கள் ஆதரித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸும் இந்த தொண்டிற்கான தனது ஆதரவை தெரிவித்துள்ளார். ராகவா லாரன்ஸ் நடத்திவரும் அறக்கட்டளையில் உள்ள குழந்தைகளுக்காக தனது ஆதரவை தெரிவித்து பல வகையில் உதவி செய்து வருகிறார் நடிகர் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே போல் நானும் ஒரு மனிதனாக எனது சமூகத்திற்கு அப்துல் கலாம் ஐயாவின் பிறந்த நாளான இன்று அவரது அமைப்பு மூலம் தொண்டு செய்வதில் பெருமைப்படுகிறேன் என்று தனது ஆதரவை #plantforkalam ஹேஷ் டாக்கிற்கு அளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

    100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர் விவேக், தனது நகைச்சுவை மூலமும் சமூகத்திற்கு பல முக்கிய கருத்துக்களை உணர்த்தியுள்ளார். அவரின் இந்த புதுவிதமான நகைச்சுவைக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அவரின் நகைச்சுவையில் மட்டும் சமூக அக்கறை காட்டி நடிப்பதோடு நிறுத்திவிடாமல் நிஜ வாழ்விலும் சமூகத்தின் மேல் அக்கறையோடு இருப்பதில் அவர் ஒரு சூப்பர் ஹீரோ தான். அவரது இந்த சேவை பணி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஐயாவின் ஆசிகளோடு மேலும் தொடரும்.

    English summary
    Actor Vivek created a hashtag called #plantforkalam on social media yesterday in honor of Abdul Kalam's birthday. He also urged people to make it trendy to raise awareness.People trended his hashtag at his request. In a matter of time, it became a worldwide trend.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X