ஹாலிவுட் ஹீரோ போல மாஸ் லுக்.. விவேக்கின் சால்ட் அண்ட் பெப்பர் போட்டோஷூட்! !
சென்னை : ஜனங்களின் கலைஞர் நடிகர் விவேக் இப்பொழுது புது விதமான கெட்டப்பில் போட்டோ ஷூட் எடுத்து அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அனைத்து முன்னணி நடிகர்களுடனும் தமிழில் நடித்துள்ள விவேக் காமெடியனாக மட்டுமல்லாமல் ஒரு சில திரைப் படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
புகைப்படங்களிலும் நிகழ்ச்சிகளிலும் மட்டுமே பார்த்து வந்த விவேக் இப்பொழுது ஆளே டோட்டலாக மாறி சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் பிளாக் அண்ட் பிளாக் காஸ்டியூமில் செம ஸ்டைலிஷாக இருக்கும் புகைப்படங்கள் இணைய தளத்தை தெறிக்க விட்டு வருகின்றன.

ஜனங்களின் கலைஞன்
நடிகர், பாடகர், காமெடியன் மற்றும் சமூக பொறுப்பாளர் என எண்ணற்ற முகங்களை கொண்டுள்ள ஜனங்களின் கலைஞன் விவேக் சினிமாவில் அனைவராலும் ரசிக்கப்படும் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கதாநாயகனாகவும்
காமெடியில் கருத்தையும் சேர்த்து அளிப்பதை தனது தனித்துவமான பாணியாக கொண்டுள்ள விவேக் இன்று வரை பல்வேறு திரைப் படங்களில் காமெடியனாகவும், ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் வந்து அசத்தினார்.

மனதில் உறுதி வேண்டும்
ஆரம்பத்தில் கிடைக்கின்ற சிறு சிறு வேடங்களில் எல்லாம் நடித்து வந்த விவேக் கே.பாலச்சந்தர் இயக்கிய "மனதில் உறுதி வேண்டும்" என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

பின் சோலோவாக
அதன் பிறகு தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களாக இருக்கின்ற கவுண்டமணி செந்தில் வடிவேலு உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து துணை காமெடி நடிகராக நடித்து வந்த விவேக் பின் சோலோவாக நடிக்க ஆரம்பித்து தனக்கென ஒரு தனி இடத்தை தமிழ் மக்களிடமும் திரைப்படங்களிலும் பெற்றார்.

பத்மஸ்ரீ விருது
ரன், சாமி, பேரழகன் உள்ளிட்ட திரைப்படங்களில் இவரது காமெடி மிகப் பிரபலமாக பேசப்பட்ட நிலையில் இதுவரை மூன்று முறை சிறந்த காமெடினுக்கான பிலிம்பேர் விருதுகளை தட்டிச் சென்றதோடு தமிழ்நாடு அரசு விருதுகளையும் பல முறை வென்றிருக்கிறார். விருதுகளை வென்றதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஜனங்களின் மனத்தையும் வென்ற விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது அளித்து இந்திய அரசு கௌரவப்படுத்தியது.

வாய் பிளக்க வைத்தார்
திரைப்படங்களில் தனது காமெடி பேச்சினால் ஜனங்களை ஒவ்வொரு நிலையிலும் கவர்ந்து வந்த விவேக் சமீபத்தில் வைட் அண்ட் வைட்டில் அட்டகாசமான போட்டோ ஷூட் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்.

பிளாக் அண்ட் பிளாக்
அதைத் தொடர்ந்து இப்பொழுது பிளாக் அண்ட் பிளாக் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் முன்னணி ஹீரோக்களுக்கே டப் கொடுக்கும் வகையில் செம ஸ்டைலிஸாக ஹாலிவுட் ஹீரோ போல மாஸாக விதவிதமான கோணங்களில் போஸ் கொடுத்திருக்கும் விவேக்கின் இந்த லேட்டஸ்ட் பிளாக் அண்ட் பிளாக் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது படு பயங்கரமாக வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











