twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நேத்துதான் சொன்னார்.. உடனே நடந்துடுச்சே..10ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பால் பிரபல நடிகர் மகிழ்ச்சி!

    |

    சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு குறித்த அறிவிப்பால் நடிகர் விவேக் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

    கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுக்க சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஜூன் 1ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதனை தொடர்ந்து தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    சென்று வாருங்கள் சகோதரரே.. இளையராஜாவின் டிரம்மர் மரணம்.. பிரபல பாடகர் இரங்கல்!சென்று வாருங்கள் சகோதரரே.. இளையராஜாவின் டிரம்மர் மரணம்.. பிரபல பாடகர் இரங்கல்!

     மன உளைச்சல்

    மன உளைச்சல்

    அந்த வகையில் நடிகர் விவேக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மனஇறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப் பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயை செய்து பரிசீலிக்கவும் என பதிவிட்டிருந்தார்.

     ஜூன் 15 ஆம் தேதி

    ஜூன் 15 ஆம் தேதி

    இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது தமிழக அரசு. இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

     நடிகர் விவேக் நன்றி

    நடிகர் விவேக் நன்றி

    இதனை பார்த்த நடிகர் விவேக் தமிழக அரசுக்கு நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், 10ஆம் வகுப்பு தேர்வை 15 நாட்களுக்கு ஒத்தி வைத்து... மாணவருக்கும் பெற்றோருக்கும் சற்று ஆசுவாசம் தந்த தமிழக அரசுக்கும்,மாண்பு மிகு முதல்வருக்கும், அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    Recommended Video

    'தாராள பிரபு' பார்த்துவிட்டு நடிகர் விவேக்கை தாராளமாகப் பாராட்டும் நடிகை! - வீடியோ
     முதலில் உரைத்தவர்

    முதலில் உரைத்தவர்

    விவேக்கின் டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தேர்வுக்கு எதிரான விமர்சனம் வைக்காமல் எதார்த்தமான கருத்துகளை அரசிற்கு முதலில் உரைத்தவர் சின்ன கலைவாணர்.. மாணவர்களின் அன்பும் பெற்றோர்களின் பாராட்டுதலும் மாறாது தங்களுக்கு கிடைத்து கொண்டே இருக்கும்

    English summary
    Actor Vivek says thanks to Tamilnadu govt for postponing 10th exams. Actor Vivek has tweeted about it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X