இந்தியன் 2-வில் விவேக் காட்சிகள் நீக்கமா..? சின்ன கலைவாணரின் கனவுக்கு உயிர் கொடுக்கும் கமல்!

சென்னை: கமல் - ஷங்கர் கூட்டணியில் கிடப்பில் இருந்த இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது.

திருப்பதி, ஹைதராபாத் ஷெட்யூலை முடித்துவிட்டு தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளது இந்தியன் 2 டீம்.

இந்தப் படம் தொடங்கியபோது மறைந்த நடிகர் விவேக்கும் கமலுடன் சேர்ந்து நடித்து வந்தார்.

முதன்முறையாக கமலுடன் இணைந்து நடித்த விவேக், எதிர்பாராதவிதமாக உயிரிழந்தது இந்தியன் 2 படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

 முதன்முறையாக கமல் - விவேக்

முதன்முறையாக கமல் - விவேக்

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் 1995ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அதன் இரண்டாம் பாகம் 2018ல் தொடங்கப்பட்டது. லைகா தயாரிப்பில் உருவான இந்தப்படத்தில் மறைந்த நடிகர் விவேக்கும் கமிட் ஆகியிருந்தார். சிவாஜி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் காமெடியில் கலக்கிய விவேக், கமலுடன் மட்டும் இணைந்து நடிக்காமல் இருந்தார். அந்த குறை இந்தியன் 2 படத்தில் தீரும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தார் விவேக்.

 நீக்கப்படுகிறதா விவேக் காட்சிகள்?

நீக்கப்படுகிறதா விவேக் காட்சிகள்?

இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கியபோது அதில் விவேக்கும் கமலுடன் சேர்ந்து சில காட்சிகளில் நடித்ததாக சொல்லப்பட்டது. ஆனால், இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்தில் 3 உதவி இயக்குநர்கள் உயிரிழப்பு, பட்ஜெட் பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனிடையே விவேக்கும் மாரடைப்பு காரணமாக 2021ம் ஆண்டில் உயிரிழந்தார். விவேக் மறைவு இந்தியன் 2 படக்குழுவினர் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகிற்கும் அதிர்ச்சியாக அமைந்தது. விவேக் மறைவை அடுத்து இந்தியன் 2 படத்தில் இருந்து அவர் நடித்த காட்சிகள் நீக்கப்படலாம் என சொல்லப்பட்டது.

 உயிர் கொடுப்பாரா கமல்?

உயிர் கொடுப்பாரா கமல்?

மேலும், விவேக்கிற்குப் பதிலாக வேறு யாரும் நடிக்கலாம் அல்லது அந்த கேரக்டரையே தூக்கிவிடலாம் என படக்குழு முடிவு செய்ததாம். ஆனால், கமலும் ஷங்கரும் அந்த முடிவை கைவிட்டுவிட்டு விவேக் நடித்த காட்சிகளை இந்தியன் 2வில் வைத்துக்கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளார்களாம். இந்தக் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் விவேக் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இறுதிக்கட்டத்தில் இந்தியன் 2

இறுதிக்கட்டத்தில் இந்தியன் 2

கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் தொடங்கிய இந்தியன் 2 ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் ஷங்கர் இன்னொரு பக்கம் ராம் சரண், கியாரா அத்வானி நடிக்கும் RC 15 படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில், இந்தியன் 2 ஷூட்டிங் விரைவில் முடிந்துவிடும் என படக்குழு தரப்பில் இருந்து அப்டேட் கிடைத்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X