தளபதி 63.. டிவிட்டரில் ‘மிரட்டல்’ அப்டேட் கொடுத்த நடிகர் விவேக்!
சென்னை: நடிகர் விஜய்யின் 63வது படமும் முழுவதும் மிரட்டலாக உருவாகி இருப்பதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் புதிய படமொன்றில் விஜய் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அப்படத்தை படக்குழுவினரும், ரசிகர்களும் 'தளபதி 63' எனக் குறிப்பிட்டு வருகின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரத்தில் விவேக்கும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய கதைக்களம் எனக் கூறப்படுகிறது. மைதானத்தில் போட்டி நடப்பது போன்ற காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.
இப்படம் தொடர்பான அப்டேட்களை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர். வரும் 22ம் தேதி விஜய் பிறந்தநாளையொட்டி, இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகும் எனத் தெரிகிறது. தீபாவளி ரிலீசாக படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இப்படம் தொடர்பாக ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் விவேக். அதில் அவர், 'விஜய் 63 முழுவதும் மிரட்டல்' எனத் தெரிவித்துள்ளார். ரசிகர் ஒருவரின் கேள்விக்கு இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் தளபதி 63 படத்திற்கு பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் விவேக், '30' என இப்படம் பற்றிய அப்டேட் ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











