சூர்யா, கார்த்திக்கு நெஞ்சு நெகிழ்ந்து நன்றி கூறியுள்ளார் நடிகர் விவேக் ! ஏன் தெரியுமா?

நடிகர்கள் சூர்யாவுக்கும் கார்த்திக்கும் நடிகர் விவேக் நெஞ்சு நெகிழ்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

Recommended Video

சூர்யா, கார்த்திக்கு நெஞ்சு நெகிழ்ந்து நன்றி கூறிய விவேக்- வீடியோ

சென்னை: நடிகர்கள் சூர்யாவுக்கும் கார்த்திக்கும் நடிகர் விவேக் நெஞ்சு நெகிழ்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கடைக்குட்டி சிங்கம். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது.

கடந்த 13ம் தேதி ரிலீசான இப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விவசாயம், ஆணவக் கொலை மற்றும் குடும்ப உறவுகள் பற்றி பேசியுள்ள இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

விவசாயிகள் பங்கேற்பு

விவசாயிகள் பங்கேற்பு

இந்த நிலையில், படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பாண்டிராஜ், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா, கார்த்தி, சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ், சரவணன், சூரி, பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், யுவராணி, மௌனிகா, இளவரசு மற்றும் விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

விவசாயிகளுக்கு நிதி

விவசாயிகளுக்கு நிதி

இந்த நிகழ்ச்சியில் விவசாயத்தில் சாதனை படைத்த நெல் ஜெயராமன் உள்ளிட்ட 5 விவசாயிகளுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது. அதாவது மொத்தம் 5 விவசாயிகளுக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

இதேபோல், தமிழக விவசாயிகளின் நலன் மற்றும் அவர்களது மேம்பாட்டுக்காக ரூ.1 கோடி நிதியை 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா வழங்கினார்.

விவேக் டிவிட்

இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 நெஞ்சு நெகிழ்ந்து நன்றிகள்

நெஞ்சு நெகிழ்ந்து நன்றிகள்

அதில் அவர் கூறிருப்பதாவது,கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றியை, இயற்கை விவசாயிகள் உடன் கொண்டாடி அவர்களுக்கு பெரும் நிதி உதவியும் செய்த சூர்யா, கார்த்தி மற்றும் அகரம் அறக்கட்டளைக்கு நெஞ்சு நெகிழ்ந்து நன்றிகள் என தெரிவித்துள்ளார் விவேக்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X