twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விவேக் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்...தமிழக அரசு உத்தரவு

    |

    சென்னை : நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 100 சதவீதம் இதய அடைப்பு இருந்துள்ளது. இருந்தும் தொடர்ந்து அவரக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 4.30 மணியளவில் விவேக்கின் உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்.

    Recommended Video

    #BREAKING நடிகர் விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை!

    Actor Vivek to be laid to rest with full state honours

    இந்நிலையில் மறைந்த விவேக்கிற்கு அரசு மரியாதை வழங்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டது தமிழக அரசு. முழு அரசு மரியாதையுடன் விவேக்கிற்கு இறுதி சடங்கு நடத்த தமிழக அரசு திட்டமிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஆணையத்திடம் அனுமதி கேட்டது தமிழக அரசு.

    தமிழக அரசின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் ஏற்றதை அடுத்து போலீஸ் மரியாதையுடன் விவேக் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், தமிழ் திரையுலகிலும், திரைப்பட ரசிகர்களாலும் சின்னக் கலைவாணர் என அழைக்கப்படுபவரும், தமிழ்சினிமா உலகில் நகைச்சுவை நடிப்பால் புகழ் பெற்றவரும், நேசிய அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றவரும், தனது ஈடு இணையற்ற கலைச் சேவையாலும், சமூக சேவையாலும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவரும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த திரு.விவேக் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அன்னாரின் கலை மற்றம் சமூகச் சேவையினை கெளரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதி சடங்குகளின் போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு ஆணையிட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    Actor Vivek to be laid to rest with full state honours
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X