கொரோனாவுக்கு பயந்து சென்னையை விட்டு வெளியேறும் மக்கள்.. பிரபல நடிகர் உருக்கம்!

சென்னை: கொரோனா அச்சம் காரணமாக மக்கள் வெளியேறி வரும் நிலையில் சென்னை குறித்து நடிகர் விவேக் உருக்கமாக டிவிட்டியிருக்கிறார்.

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் உள்ளார் விவேக்.

ஏராளமான படங்களில் நடித்துள்ள விவேக், சமூகம் சார்ந்த நற்பணிகளையும் செய்து வருகிறார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மீது தீவிர பற்றுக் கொண்ட விவேக் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மரங்களை நட்டு வருகிறார்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக உள்ள விவேக், தற்போது சென்னை குறித்து உருக்கமாக டிவிட்டியுள்ளார். சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் சிலர் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

சென்னையை நம்பி

சென்னையை நம்பி

அவர்களில் பெரும்பாலானவர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு பாத்திர பண்டங்களுடன் வெளியேறி வருகின்றனர். சென்னையை நம்பி இனி வாழ முடியாது என கூறி அவர்கள் ஊரை காலி செய்கின்றனர்.

மீளும்.. வாழும்..

மீளும்.. வாழும்..

இதனை அறிந்த நடிகர் விவேக் சென்னை குறித்து உருக்கமாக டிவிட்டியிருக்கிறார். அதாவது, எல்லோரும் கழிவிரக்கம், அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள்.பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர்.தலைநகர்!பல மொழி,இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை.அது மீளும்;வாழும்! என பதிவிட்டுள்ளார்.

வாழ்வு அளிக்கும்

வாழ்வு அளிக்கும்

நடிகர் விவேக்கின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், சரியான பதிவு என பாராட்டி வருகின்றனர். விவேக்கின் டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள், சரியான பதிவு.. அனைத்து மாவட்ட மக்கள் ஒன்றாய் இருந்த ஒரே தலைநகர் நம் சென்னை.. இந்த துயரம் விரைவில் நீங்கி எப்போதும் போல், வந்தவருக்கு வாழ்வு அளிக்கும் சென்னையாக வர சில நாட்களை உள்ளன.. என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Read more about: vivek விவேக்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X