தனுஷ் ப்ரோ ஏன் இப்படி பண்றீங்க... கர்ணன் படத்தை பார்த்துவிட்டு நடிகர் விவேக் ட்வீட்!
சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பிற்குப் பிறகு கர்ணன் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரத்தில் வெற்றி நடைபோடுகிறது.
Recommended Video
இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கம், சந்தோஷ் நாராயணனின் மேஜிக்கல் இசை தனுஷின் மிரட்டும் நடிப்பு என காட்சிக்கு காட்சி கூஸ்பம்ஸ் தெரிகிறது.
பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் கர்ணன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் தற்போது ஜனங்களின் கலைஞன் விவேக் கர்ணன் படத்தை பார்த்துவிட்டு தனுஷ் ப்ரோ ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க என ட்வீட் போட்டுள்ளது வைரலாகியுள்ளது.

தேசிய விருதுகளை
தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத மிகச் சிறந்த நடிகராக உயர்ந்திருக்கும் நடிகர் தனுஷ் தமிழைத் தொடர்ந்து இந்தியிலும் கலக்க இப்பொழுது அதையும் தாண்டி ஹாலிவுட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் விருதுகளுக்கு என நேந்துவிட்டது போல குவிந்து வரும் நிலையில் சென்ற ஆண்டு வெளியான அசுரன் தேசிய விருதுகளை கைப்பற்றியதோடு தனுஷின் அடுத்தடுத்து திரைப்படங்களுக்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

கர்ணன்
சாதாரணமாகவே தனுஷின் திரைப்படங்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்பார்ப்புகள் இருக்கும் இப்பொழுது மாரி செல்வராஜ் உடன் முதல் முறையாக இணைந்து பணியாற்றியுள்ள கர்ணன் திரைப்படம் கொரானா சூழலுக்கும் நடுவிலும் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டு உள்ளது.

ஆகச்சிறந்த படமாக
கர்ணன் வெளியான இடமெல்லாம் வெற்றி முழக்கங்கள் ஒலித்துக் கொண்டிருக்க ரசிகர்களின் பாராட்டு மழையில் தொடர்ந்து நனைந்துவர பல திரைப்பிரபலங்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ் சினிமாவில் வெளியான ஆகச்சிறந்த படமாக கர்ணன் விமர்சனங்களையும் குவித்து வருகிறது.

எப்படி தனுஷ் ப்ரோ
இந்த நிலையில் ஜனங்களின் கலைஞன் விவேக் படத்தை பார்த்துவிட்டு கூரியுள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே.. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்படி தனுஷ் ப்ரோ! கர்ணன் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என தனது நகைச்சுவை கலந்த பாணியில் படிக்காதவன் படத்தில் தனுஷ் விவேக் இருவருக்கும் உள்ள காமெடி காட்சி ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டு இவ்வாறு கர்ணன் பட குழுவையும் தனுஷையும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.


Click it and Unblock the Notifications











