வித்தியாசமாக சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த நடிகர் விவேக்!
நடிகர் விவேக் தேசிய கீதத்தை வாசித்து சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் விவேக் தேசிய கீதத்தை வாசித்து சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று 72வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தேசிய தலைவர்கள், திரை நட்சத்திரங்களும் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக் பியானோ மூலம், தேசிய கீதத்தை வாசித்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது டிவிட்டர் பக்கத்தில் அவர் பியானோ வாசிக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதற்கு நீங்கள் உண்மையிலேயே பன்முக கலைஞர் தான் என ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Comments


Click it and Unblock the Notifications