கொரோனா.. மே இறுதியில் விடிவு கிடைக்கும்னு சொல்றாங்க..' நடிகர் விவேக் லேட்டஸ்ட் வீடியோ!

By

சென்னை: முழுமையாக ஊரடங்கை பின்பற்றினால் கொரோனாவில் இருந்து வெளிவரலாம் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.

Recommended Video

மே இறுதியில் விடிவு கிடைக்கும்னு சொல்றாங்க.. நடிகர் விவேக் லேட்டஸ்ட் வீடியோ!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கொடூரமாக மிரட்டி வருகிறது. இந்த வைரஸுக்கு ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவருகிறது.

கொரோனா

கொரோனா

ஊரடங்கு விதிக்கப்பட்டும் இந்த உயிர்க்கொள்ளித் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 872 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,892 ஆக உயர்வடைந்துள்ளது. தமிழகத்தில் 1,885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 1,020 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.

புதிய வீடியோ

புதிய வீடியோ

இந்நிலையில் கொரோனா விழிப்புணர்வுக்காக புதிய வீடியோ ஒன்றை நடிகர் விவேக் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இப்ப முழுமையான ஊரடங்கு அறிவிச்சிருக்காங்க. எதனால இது? என்னைக்கு இதுல இருந்து வெளிய வருவோம், என்னைக்கு சஜமாக இருப்போம்னு எல்லோரும் கேட்கிறோம். என்னைக்கு, அரசு சொல்றதை நாம கேட்கிறோமோ, அன்னைக்குத்தான் நாம வெளிய வரமுடியும்.

கூட்டமாக நிற்பது

கூட்டமாக நிற்பது

அதனாலதான் இந்த ஊரடங்கு தொடருது. இந்த தொற்று குறைஞ்சு, ஸீரோ கேசஸ்னு வரணும். அப்பதான் நாமளும் அதுல இருந்து வெளிய வர உதவும். தீதும் நன்றும் பிறர்தர வாரா. எங்க போனாலும் பைக்ல பிரெண்ட்ஸ்களோட போறது, கடைகள்ல கூட்டமா நிற்கறதை பார்க்கிறோம். இப்படி இருக்கிற வரைக்கும் நம்மால ஊரடங்கை நிறுத்த முடியாது.

முழுமையான ஊரடங்கு

முழுமையான ஊரடங்கு

நாம இப்ப முக்கியமான கட்டத்துல இருக்கோம். மக்களே, இளைஞர்களே, கொஞ்சம் யோசிச்சு பாருங்க. முழுமையான ஊரடங்கை பின்பற்றி, எப்படியாவது இந்த தொற்று குறைஞ்சு, கேசஸ் ஸீரோன்னு வரும்போது நாம வெளிய வர முடியும். அது நம்ம கையிலதான் இருக்கு. நாம இனி மேலாவது விழித்துக் கொண்டு தனிமையில் இருக்கவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் செய்யணும்.

விடிவு கிடைக்கலாம்

விடிவு கிடைக்கலாம்

சிங்கப்பூர்ல இருந்த வந்த லேட்டஸ்ட் ஆய்வின்படி, மே மாத இறுதியில இதுக்கு ஒரு விடிவு கிடைக்கலாம்னு சொல்றாங்க, உலகத்துக்கே. நமக்கும் சீக்கிரம் கிடைக்க வாய்ப்பிருக்கு, தமிழக அரசுடனும் இந்திய அரசுடனும் ஒத்துழைத்தால். நன்றி. இவ்வாறு அந்த வீடியோவில் நடிகர் விவேக் கூறியுள்ளார். ஏற்கனவே கொரோனா விழிப்புணர்வுக்காகவும், டாக்டர் சைமன் இறந்தபோது நடந்த வன்முறையின்போதும் நடிகர் விவேக் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X