இது போன்ற பாராட்டுக்கள் என் போன்ற நடிகர்களுக்கு டானிக்.. ரசிகரின் பதிவால் உருகிய விவேக்!
சென்னை: ரசிகரின் பதிவை பார்த்த நடிகர் விவேக் இதுபோன்ற பாராட்டுக்கள்தான் தன்னை போன்ற நடிகர்களுக்கு டானிக் என பாராட்டியுள்ளார்.
நடிகர் விவேக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

பல நகைச்சுவை நடிகர்கள் வந்த போதும் சீரியஸான விஷயங்களை சிரிக்கும் சிந்திக்கும் படியும் நகைச்சுவையாக கூறி வருகிறார்.
இளைஞர்களுக்கும் சமூகத்துக்கும் தேவையான கருத்துக்களை தன்னுடைய காமெடியோடு நகைச்சுவையாக அடித்து விடுவார். இதற்காகவே அவரது காமெடிக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் நடிகர் விவேக் ரசிகர் ஒருவரின் பதிவை பார்த்து நெகிழ்ந்துள்ளார். அதாவது விவேக்கின் பல்வேறு காமெடி காட்சிகளின் ஸ்டில்களை பதிவிட்டு தோற்று போகாத ஒரே நகைச்சுவை நடிகர், இளைஞர்களை ஊக்குவிப்பது, தனது டயலாக் மூலம் சமூகத்திற்கு கருத்துக்கு மெஸேஜ் சொல்வது என பாராட்டியிருந்தார்.
அதோடு, நீங்கள் என்னை சந்தோஷப்படுத்துகிறீர்கள், அழ வைக்கிறீர்கள், பெருமை படுத்துகிறீர்கள் நன்றி விவேக் சார் என பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த நடிகர் விவேக், மிக்க நன்றி.. இது போன்ற பாராட்டுக்கள் என் போன்ற நடிகர்களுக்கு டானிக்.. என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











