எளிமை இனிமை உழைப்பு உயர்வு.. இப்பூக்கள் பூத்த “வசந்த்”தகாலம் விடை பெற்றதே.. நடிகர் விவேக் உருக்கம்!
சென்னை: எளிமை இனிமை உழைப்பு உயர்வு ஆகிய பூக்களை பூத்த வசந்த காலம் விடை பெற்றதாக நடிகர் விவேக் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் வசந்த் அன்ட் கோ நிறுவனத்தின் நிறுவனருமான வசந்தகுமார் இன்று மாலை காலமானார்.

70 வயதான வசந்தகுமார், கடந்த 11ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
வசந்தகுமார் மறைவுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் வசந்தகுமாரின் சிரித்தப்படியே இருக்கும் அந்த முகத்தை எப்போது பார்ப்போம் என உருக்கமாக தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விவேக் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
எளிமை இனிமை உழைப்பு உயர்வு ! இப்பூக்கள் பூத்த "வசந்த்"தகாலம் விடை பெற்றதே. எனக்கு அவர் நல்ல நண்பர். அவரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் வசந்த்&கோ, வசந்த் டிவி பணியாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











