விஜயுடன் கோர்த்துவிட்ட மீரா மிதுன்.. மறைமுகமாக விளாசிய பிரபல நடிகர்.. கொண்டாடும் ஃபேன்ஸ்!

சென்னை: விஜய் குறித்து விமர்சனம் செய்த நடிகை மீரா மிதுனை நடிகை விவேக் மறைமுகமாக சாடியிருக்கிறார்.

Recommended Video

Vijay யை சீண்டும் Meera Mithun, கொதிக்கும் ரசிகர்கள்.

தெலுங்கு நடிகரான மகேஷ்பாபு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது மகேஷ் பாபு மரக்கன்று நடும் புகைப்படத்தை தனது டிவிட்டரில் பகிர்ந்தார்.

மேலும் எனது பிறந்த நாளை கொண்டாட இதை விட சிறந்த முறை இல்லை. நான் கிரீன் இந்தியா சவாலை நடிகர் விஜய், நடிகை சுருதிஹாசன், நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோருக்கு விடுக்கிறேன்.

விஜய் ஏற்பாரா?

விஜய் ஏற்பாரா?

எல்லைகள் கடந்து இந்த சங்கிலி தொடரட்டும். இதற்கு ஆதரவு தாருங்கள். பசுமையான உலகை நோக்கி செல்வோம் என்றும் பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் இந்த சவாலை ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

வைரலான போட்டோஸ்

வைரலான போட்டோஸ்

இந்த நிலையில் மகேஷ்பாபுவின் கிரீன் இந்தியா சவாலை ஏற்றுக்கொண்டு நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் மரக்கன்று நட்டார். மரக்கன்று நடும் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டார். இதனை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றார்.

பலரும் பாராட்டு

பலரும் பாராட்டு

போட்டோ ஷேர் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கில் லைக்ஸ்களை அள்ளியது. ஒரு லட்சத்திற்கும் அதிமாக ரீடிவிட் செய்யப்பட்டு வருகிறது. அதோடு திரைத்துறை பிரபலங்கள் பலரும் நடிகர் விஜயின் இந்த செயலுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

விவேக்கை கோர்த்து விட்டு

விவேக்கை கோர்த்து விட்டு

ஆனால் கடந்த சில நாட்களாக நடிகர் விஜய் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் தரக்குறைவாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வரும் மீரா மிதுன், அவரது இந்த செயலையும் விமர்சித்தார். இதுதொடர்பாக டிவிட்டிய மீரா மிதுன், உங்களுடைய வில்லாவில் ஒரு மரக்கன்று நடுவது சமூக அக்கறை அல்ல, மரக்கன்றுகளை எப்படி, எங்கு நடவேண்டும் என்பதை நடிகர் விவேக்கிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் என பதிவிட்டிருந்தார்.

மறைமுக பதிலடி

மறைமுக பதிலடி

இதனை பார்த்த நடிகர் விவேக், மகேஷ் பாபு சாருக்கும் நம்முடைய விஜய் சார் ஆகிய இருவருக்கும் மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் இயற்கைக்கு ஏதாவது நல்லது செய்யும்போது, அவர்களின் ரசிகர்கள் அனைவரும் அதைப் பின்பற்ற ஊக்கப்படுத்தப்படுகிறார்கள், நல்லது செய்வோம். இதை நாங்கள் பாராட்டுகிறோம். ப்ளீஸ் ஒருபோதும் ஒருவரை மற்றொருவரோடு ஒப்பிட வேண்டாம். எங்கள் இறுதி நோக்கம் ஒரு பசுமையான பூமியை உருவாக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

எல்லோர்கிட்டேயும் அடி

எல்லோர்கிட்டேயும் அடி

தன்னோடு நடிகர் விஜயை ஒப்பிட்டு அவரை குறைத்து மதிப்பிட்டு பேசிய மீரா மிதுனுக்குதான் விவேக் இவ்வாறு மறைமுகமாக பதிலளித்தார் என தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், அசிங்கப்பட்டார் மீரா மிதுன், எல்லோருக்கிட்டேயும் அடி வாங்கி வருகிறார் என கருத்து கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X