ஏலே.. நான் ரெடி.. நீங்க ரெடியா.. மீம்ஸால் இம்ப்ரஸான நடிகர் விவேக்.. இடத்த மட்டும் காட்டுங்க!
சென்னை: ரசிகர் ஒருவர் ஷேர் செய்த மீம்ஸை பார்த்த நடிகர் விவேக் ஏரிகளை தூர்வார நான் ரெடி என தெரிவித்துள்ளார்.
Recommended Video
30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் விவேக்.
தனது கருத்துமிக்க நகைச்சுவை காட்சிகளாலும் வசனங்களாலும் ரசிகர்களின் மனத்தில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். அப்துல் கலாமின் கொள்களை பின்பற்றும் விவேக் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மரங்களை நட்டு வருகிறார்.

தூர் வாரலாமே?
இந்நிலையில் விவேக் கூறிய கருத்து ஒன்றை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் வெளியிட்டனர். அதாவது, விடுமுறை நாட்களில் மாணவர்கள் ஏரிகளை தூர் வாரலாம் என்று கூறியிருந்தார். அதனை குறிப்பிட்டு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நடிகர்களும் தூர் வாரலாமே? கூட்டமும் கூடும். தூர் வாரும் வேலையும் நடக்கும்.. என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீங்க ரெடியா?
இதனை நடிகர் விவேக்குக்கு டேக் செய்த ரசிகர் ஒருவர், சார் ஏதாவது ஐடியா இருக்கா? என்று கேட்டிருந்தார். இந்த மீம்ஸையும் டிவிட்டையும் பார்த்த நடிகர் விவேக், நான் ரெடி! சோஷியல் டிஸ்டன்ஸிங்கோடு நாம் இதை செய்யலாம். ஆனால் நீங்க வந்து இடத்தை காட்டுவீர்களா? வாலன்டியர்ஸ்களை கொண்டு வருவீர்களா என கேட்டுள்ளார்.

நல்ல அனுபவம்
விவேக்கின் இந்த டிவிட்டை பார்த்த ரசிகர்கள், சார் இது பெரிய ஐடியா, இந்த சேவையை செய்ய இது சிறந்த நேரமும் கூட.. இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே மரம் நடும் விஷயத்தில் பெரும் வெற்றி கண்டு விரிவான அனுபவம் பெற்றுள்ளீர்கள் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மழைக்காலத்துக்கு முன்பு
மேலும் பல ரசிகர்கள், நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கு வரவேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள் என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் மழை காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த பணியை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும் என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











