எஸ்பிபியின் பாடலை பியானோவில் வாசித்து பிரார்த்தனை செய்த பிரபல நடிகர்.. வைரலாகும் வீடியோ!
சென்னை: நடிகர் விவேக் எஸ்பிபி பாடிய பாடலை பியானோவில் வாசித்து அவருக்காக பிரார்த்தனை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக எஸ்பிபி மீண்டு வர வேண்டும் என்ற குரல்தான் சமூக வலைதள பக்கங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அவர் நலம் பெற வேண்டி இன்று மாலை மாஸ் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பாரதிராஜா, ஆர்வி உதயக்குமார், கங்கை அமரன், தேவா, சித்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

ட்ரென்டிங்
சமூக வலைதளங்களில் பிரபலங்கள் தங்களின் பிரார்த்தனையை பகிர்ந்து கொண்டனர். #SPBalasubraniam, #GetWellSoonSPBSIR ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரென்ட்டிங்கில் இடம்பிடித்தன.

பியானோ வாசித்து
இந்நிலையில் நடிகர் விவேக் பியானோவில் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடலை பாடி அவருக்காக பிரார்த்தனை செய்தார். கேளடி கண்மணி படத்தில் எஸ்பிபி குரலில் இடம்பெற்ற மண்ணில் இந்த காதல் இன்றி பாடலில் எஸ்பிபி மூச்சுவிடாமல் பாடும் போர்ஷனை தனது பியானோவில் வாசித்தார் விவேக்.

மனமுருகி பிரார்த்தனை
மேலும் அந்த வீடியோவில் தனது பியானோவுக்கு அருகிலேயே மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைத்துள்ளார். எஸ்பிபி குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என கண்களை மூடி மனமுருகி பிரார்த்தனை செய்துள்ளார் நடிகர் விவேக்.

நிச்சயம் வருவார்
இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள விவேக், பிராத்தித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளளார். அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அருமையான வாசிப்பு இதைக் கேட்க எஸ்பி பாலசுப்ரமணியம் நிச்சயம் வருவார் என கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











