கமல்ஹாசனுடன் முதல் முறையாக கைக்கோர்க்கும் விவேக்! பாலச்சந்தரின் பள்ளி மாணவர்கள் இணையும் பிரமாண்டம்!

சென்னை: நடிகர் விவேக் முதல் முறையாக நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளதை தொடர்ந்து அதனை உறுதி செய்யும் விதமாக டிவிட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் நடிகர் விவேக். இவர் மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

ஏராளமான படங்களில் நடித்துள்ள விவேக், தனது நகைச்சுவையின் மூலம் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களையும் கூறுவார். இதனால் சின்ன கலைவாணர் என்றும் அழைக்கப்படுகிறார் விவேக்.

இணையவில்லை

இணையவில்லை

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவை கேரக்டரில் நடித்துள்ளார். ஆனால் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர், உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமலுடன் ஒரு படத்தில் கூட விவேக் இணைந்து நடித்ததில்லை.

கமலுடன் இணையும் விவேக்

கமலுடன் இணையும் விவேக்

இது ஒரு பெரும் கவலையாகவே இருந்தது அவருக்கு. ஷங்கர் உடன் பாய்ஸ், சிவாஜி, அந்நியன் உள்ளிட்ட படங்களில் கூட்டணி சேர்ந்துள்ள விவேக், கமலுடன் ஒரு படத்தில் கூட சேரவில்லை.

கிடைக்காத வாய்ப்பு

கிடைக்காத வாய்ப்பு

நடிகர் வடிவேல் தேவர் மகன், சிங்கார வேலன் உள்ளிட்ட படங்களில் கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஆனால் விவேக்கிற்கு அந்த வாய்ப்பு இதுவரை கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் இணைகிறார் நடிகர் விவேக்.

இணையாத ஒரே நடிகர்

இணையாத ஒரே நடிகர்

கிட்டதட்ட தமிழ்சினிமாவின் அனைத்து காமெடி நட்சத்திரங்களும் கமலுடன் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி காமெடி நடிகராக உள்ள விவேக், கமலுடன் சேர்ந்து நடிக்காததால் கமலுடன் இணையாத ஒரே நடிகர் என்ற பெயரை பெற்றிருந்தார்.

32 ஆண்டுகள் காத்திருப்பு

32 ஆண்டுகள் காத்திருப்பு

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் நடிப்பதன் மூலம் அந்த பெயரை இழந்துள்ள விவேக், ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து நடிகர்களடன் நடித்த நடிகர் என்ற பெருமையை பெறுகிறார் விவேக். 32 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் நடிகர் விவேக்குக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரசிகர்கள் கவலை

ரசிகர்கள் கவலை

நடிகர் கமல்ஹாசனும் சரி நடிகர் விவேக்கும் சரி இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தரின் நடிப்பு பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தவர்கள்தான். இருவரும் பெரும் திறமைசாலிகள். பன்முக திறன் கொண்ட இவர்கள் இருவரும் இணைந்து நடிக்காமல் இருந்தது ரசிகர்களுக்கே பெரும் கவலையாகதான் இருந்தது.

நிகழும் போதே பக்குவம்

நிகழும் போதே பக்குவம்

தற்போது இந்தியன் 2 படத்தில் கமலுடன் சேர்ந்து நடிப்பதன் மூலம் தனது கனவு நிறைவேறிவிட்டதாக கூறியுள்ளார் நடிகர் விவேக். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள தனது டிவிட்டில், நிகழும் வரை சொப்பனம், நிகழும் போதோ பக்குவம். 32 ஆண்டுகள் தந்த நிதானம். முழுமையான ஈடுபாட்டுடன் உழைப்பதே இக்கணப் பிரதானம். எப்போதும் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். கமல் சார்க்கு என் அன்பு; ஷங்கர் அவர்களுக்கு என் நன்றி. லைக்காவுக்கு என் வாழ்த்துக்கள். நான் தூங்குவதற்கு முன் பல மைல்களை அடைய வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

மேலும் 3 ஹீரோயின்கள்

மேலும் 3 ஹீரோயின்கள்

இந்தியன் 2 படத்தை லைக்கா புரடெக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக காஜல் அகர்வால் வருகிறார். ரகுல்பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் என்று மேலும் 3 கதாநாயகிகளையும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மீண்டும் படப்பிடிப்பு

மீண்டும் படப்பிடிப்பு

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு போட்ட வயதானவர் வேடம் சரியாக இல்லாததால் சில மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது வெளிநாட்டு மேக்கப் மேன்கள் வரவழைக்கப்பட்டு மேக்கப்போட படவுள்ளது. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X