சினிமா.. மரம் நடுதல் தாண்டி.. இசை மீது தீரா காதல்.. மகனின் பியானோவில் வாசிக்க கற்ற விவேக்!
சென்னை: நடிகர் விவேக்கிற்கு சினிமாவில் நடிப்பது, மரக்கன்றுகளை நடுவது என்பதையும் தாண்டி இசை மீது பேரார்வம் இருந்தது.
Recommended Video
நடிகர் விவேக் சிறந்த நகைச்சுவை நடிகர் மற்றும் சிறந்த குணச்சித்திர நடிகராக திகழ்ந்தார். தொலைக்காட்சி நடிகர், பின்னணி பாடகர், சமூக ஆர்வலர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என பலமுகங்களை கொண்டிருந்தார்.
விவேக்கிற்கு அருள் செல்வி என்ற மனைவியும் அமிர்தாநந்தினி, தேஜஸ்வினி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். விவேக்கிற்கு பிரசன்ன குமார் என்ற மகன் இருந்தார்.

மகனை பறிகொடுத்து
மூளைக்காய்ச்சல் காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டு விவேக்கின் மகன் பிரசன்ன குமார் தனது 13 வயதில் உயிரிழந்தார். அப்போதே நொறுங்கி போய்விட்டார் விவேக். தனது ஒரே மகனை பறிகொடுத்த விவேக், தன்னை அந்த துயர சம்பவத்தில் இருந்து விலக்கி கொள்ள முயற்சித்தார்.

மக்களுக்கு உதவிகள்
இதற்காக மக்கள் பணியில் அதிக ஆர்வம் செலுத்தி வந்தார். மரக்கன்றுகள் நடுவது, ஏழை எளியோருக்கு உதவுவது என இருந்து வந்தார். கொரோனா லாக்டவுன் நேரத்திலும் கூட ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்கள் உட்பட பல உதவிகளை செய்தார்.

இசை மீது தீரா காதல்
சிறு வயது முதலே இசை மீது தீரா காதல் கொண்ட விவேக், லாக்டவுன் நேரத்தில் பியானோ வாசிப்பதையும் கற்றுக்கொண்டார். இதனை லாக்டவுன் நேரத்தில் படிப்பது, படங்களை பார்ப்பது, உடற்பயிற்சி செய்வதையும் தாண்டி இசைக்கருவியை வாசிப்பதும் பெரும் இன்பம் என்று கூறியிருந்தார்.

மகனின் பியானோவில்
தனக்கு பிடித்த இளையராஜாவின் பாடல்களை பியானோவில் கற்றுக் கொண்டு அந்த வீடியோவை இளையராஜாவிடம் போட்டு காண்பித்து பாராட்டும் பெற்றார் நடிகர் விவேக். தனது மகன் வாசித்த பியானோவில் தானும் வாசிக்க கற்றுக் கொண்டதாக கூறினார் விவேக்.
ரவுடி பேபி பாடல்
பியானோ வாசிக்க கற்றுக்கொண்ட நடிகர் விவேக் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பியானோ வாசித்து வாழ்த்து தெரிவித்தார். அதாவது யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளி வந்த ரவுடி பேபி பாடலை பியானோவில் வாசித்து வாழ்த்து கூறினார்.

மண்ணில் இந்த காதலன்றி
இதேபோல் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கான கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்ட நடிகர் விவேக் கேளடி கண்மணி படத்தில் அவர் மூச்சு விடாமல் பாடிய மண்ணில் இந்த காதலன்றி பாடலை பியானோவில் வாசித்து அவர் மீண்டு வருவார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











