பேரதிர்ச்சியாக உள்ளது.. வடிவேலு பாலாஜியின் திடீர் மரணம்.. நடிகர் விவேக் ஆழ்ந்த இரங்கல்
சென்னை: சின்னத்திரை நடிகர் வடிவேலு பாலாஜியின் மரணத்திற்கு நடிகர் விவேக் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
கலக்கப்போவது யாரு, அது இது எது என விஜய் டிவியின் காமெடி ஷோக்களில் முத்திரை பதித்து வந்த நடிகர் வடிவேலு பாலாஜி, மாரடைப்பு காரணமாக காலமானார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடிவேலு பாலாஜி, நிதி நெருக்கடி காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் மாற்றப்பட்டு, இறுதியாக அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
திரை பிரபலங்கள், சீரியல் பிரபலங்கள் என பலரும் நடிகர் வடிவேலு பாலாஜியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல காமெடி நடிகரான விவேக், தனது ட்விட்டர் பக்கத்தில், "சின்னத் திரையில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய வடிவேல் பாலாஜியின் திடீர் மறைவு பேரதிர்ச்சியாக உள்ளது." என தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Recommended Video
நடிகர் விவேக்கின் ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட ரசிகர்கள், காமெடி நடிகர் வடிவேலு பாலாஜியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











