எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. இப்போ சொல்லுங்க விவேக் அந்த வசனத்தை.. சும்மா தெறிக்குதே!

சென்னை: எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என காமெடியாக வசனம் சொல்லி தமிழ் சினிமாவையே கலக்கிய கருத்து கந்தசாமி இப்போ, சூப்பர்ஸ்டார் போல செம ஸ்டைலாக மாறி உள்ள போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

மேலும், இன்ஸ்டாகிராமத்துக்குள் மீண்டும் தான் குடி புகுந்து உள்ளேன் என்கிற அறிவிப்பையும் நகைச்சுவை நடிகர் விவேக் வெளியிட்டுள்ளார்.

ஹீரோயின்கள் மட்டும் தான் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை போடணுமா, நாங்களும் இனி கலக்குவோம் என களத்தில் இறங்கி உள்ளார்.

ஒயிட் அண்ட் ஒயிட்

ஒயிட் அண்ட் ஒயிட்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வழி காட்டுதலின் பேரில் லட்சக் கணக்கான மரக்கன்றுகளை தமிழகம் முழுவதும் நட்டு வரும் வெள்ளை உள்ளம் கொண்ட நடிகர் விவேக், கம்ப்ளீட்டா ஒயிட் அண்ட் ஒயிட்டில் எடுத்த புதிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்

சால்ட் அண்ட் பெப்பர் லுக்

வெள்ளை கோட், வெள்ளை பேன்ட், கூலர்ஸ் அணிந்து கொண்டு, பின்னாடி வெள்ளை நிற பழைய டெலிபோன், வெள்ளை நிற சேர் இருக்கும் பேக்ரவுண்டில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் செம ஸ்டைலிஷ் ஆக இருக்கும் நடிகர் விவேக்கின் புகைப்படம் வைரலாகி வருகிறது. எப்படி இருந்த விவேக் இப்படி ஆகிட்டாரே என அட போட வைக்கிறது.

ராயல் என்ட்ரி

ராயல் என்ட்ரி

இன்ஸ்டாகிராமை திறந்தாலே நடிகைகளின் கண்கவரும் கவர்ச்சி புகைப்படங்கள் தான் அடுக்கி இருக்கும். சில நடிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்கவுன்ட் வைத்து இருந்தாலும், ஹீரோயின்களை போல ஆக்டிவாக இருப்பதில்லை. இந்நிலையில், காமெடி நடிகர் விவேக் அட்டகாசமான போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமுக்கு ராயல் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஏற்கனவே

ஏற்கனவே

கடந்த ஏப்ரல் மாதமே நடிகர் விவேக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். அப்துல் கலாம் உடன் பேட்டி எடுத்த வீடியோ மற்றும் சில புகைப்படங்களை அதில் ஷேர் செய்திருந்தார். அதன் பின்னர், கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்ட நிலையில், அவரும் தனது இன்ஸ்டா பக்கத்திற்கு லீவு விட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் இன்ஸ்டா பக்கத்தில் அடியெடுத்து வைத்துள்ளதை அறிவித்துள்ளார்

நியூ வில்லன்

நியூ வில்லன்

vபிகில், வெள்ளைப் பூக்கள், தாராள பிரபு என சமீபத்தில் நடிகர் விவேக் நடித்த எல்லா படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் தான். தாராள பிரபு படத்தின் ஹீரோ ஹரிஷ் கல்யாணி விவேக்கின் இந்த புதிய கெட்டப்பை பார்த்து விட்டு, கோலிவுட்டுக்கு நியூ வில்லன் கிடைச்சிட்டாரு என கமெண்ட் செய்துள்ளார். ஒரு வேளை ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தில் இவரே வில்லனா நடித்து வருகிறாரா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X