அழகிய தமிழும், முழங்கிய குரலும்,வழங்கிய நடிப்பும்.. நடிகர் சிவாஜி கணேசனை நினைவு கூர்ந்த விவேக்!

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாளை முன்னிட்டு நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் அவரை நினைவு கூர்ந்துள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசன் தனது வியக்க வைக்கும் நடிப்பால் தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் பிரமிக்க வைத்தவர்.

Actor Vivekh remembering actor Sivaji Ganesan on his death anniversary

கடவுள்களையும், பல வரலாற்று சிறப்பு மிக்க கதாப்பாத்திரங்களையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியவர். தமிழ்த் திரைத்துறையின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த சிவாஜி கணேசன், கடந்த 2001ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி காலமானார்.

இன்று அவரது 19வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள் பலரும் நடிகர் சிவாஜி கணேசனை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

Actor Vivekh remembering actor Sivaji Ganesan on his death anniversary

அந்த வகையில் நடிகர் விவேக், சிவாஜி கணேசனை தனது டிவிட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, அழகிய தமிழும், முழங்கிய குரலும்,வழங்கிய நடிப்பும்..துலங்கிய முகமுமாய் நம்முடன் இன்றும் என்றும் வாழும் நடிகர் திலகத்தை...நினைவு கொள்வோம்.. என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X