மருத்துவர்களுக்கு நன்றி கூறிய விவேக்.. பார்த்து பார்த்து கதறும் ரசிகர்கள்.. வைரலாகும் கடைசி ட் வீ ட்!
சென்னை: நடிகர் விவேக்கின் கடைசி ட் வீ ட்டை பார்த்த ரசிகர்கள் கதறி வருகின்றனர்.
Recommended Video
சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக், ரஜினி, அஜித், விஜய், தனுஷ், ஜெயம் ரவி என டாப் நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் விவேக், ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

பிரபலங்கள் அஞ்சலி
நடிகர் விவேக்கின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் விவேக்கின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விழிப்புணர்வு
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்தவர் நடிகர் விவேக். நேற்று முன்தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக், தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அச்சப்படக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்.
கடைசி ட் வீ ட்
மேலும் தனது டிவிட்டர் பக்கத்திலும், தனக்கு தடுப்பூசி போட்ட மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து டிவிட்டியிருந்தார். அதாவது, அரசு சுகாதாரத்துறை செயலர், ஓமந்தூரார் மருத்துவமனை டீன் மரு.ஜெயந்தி, மருத்துவர்கள் ஆனந்த், ரமேஷ் ஆகியோருக்கு என் நன்றி என அவர்களின் டிவிட்டர் ஹேண்டிலையும் குறிப்பிட்டிருந்தார்.

தாங்க முடியவில்லை
இதுவே அவரது கடைசி டிவிட்டானது. இந்நிலையில் நடிகர் விவேக்கின் இந்த கடைசி ட் வீ ட்டைப் பார்த்த ரசிகர்கள், அவரது டிவிட்டர் பக்கத்திலேயே கதறி வருகின்றனர். உங்களின் இழப்பை எங்களால் தாங்க முடியவில்லை என கண்ணீர் விட்டு வருகின்றனர்.
ஏமாற்றி விட்டீர்களே விவேக்
நீங்கள் நலமுடன் வீடு திரும்புவீர்கள் என் நினைத்தேனே.மிக வருத்தமான செய்தி. ஏமாற்றி விட்டீர்களே விவேக் என உருக்கமாக பதிவிட்டுள்ளார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











