உங்கள் கனவில் நாங்கள்.. எங்கள் நினைவில் நீங்கள்.. அப்துல்கலாம் நினைவு நாளில் நடிகர் விவேக் உருக்கம்!
சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு நடிகர் விவேக் உருக்கமாக டிவிட்டியுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கடந்த 2015-ஆம் ஆண்டு மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது அவர் மரணமடைந்தார்.

ராமேஸ்வரத்தில் உள்ள பேய்க்கரும்பு எனும் இடத்தில் அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இன்று அவரது 5 ஆம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு பலரும் அப்துல் கலாம் குறித்த தங்களின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அப்துல் கலாமின் மிகுந்த மரியாதை கொண்டுள்ள நடிகர் விவேக், அவரது நினைவு நாளை முன்னிட்டு உருக்கமான பதிவை ஷேர் செய்துள்ளார்.

அதாவது, நீ கவிதைகள் எழுதி வைத்தது தாளில்.. ஆனால்... கனவுகள் இறக்கி வைத்தது எங்கள் தோளில்!! அவ்வப்போது இடறுகின்றது; ஆயினும் பயணம் தொடர்கின்றது!! உங்கள் கனவில் நாங்கள்! எங்கள் நினைவில் நீங்கள்! என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











