இடிபாடுகளுக்கு இடையில் பூச்செடி வளர்வது போன்று நாமும் மீண்டு வருவோம்.. நடிகர் விவேக் நம்பிக்கை!
சென்னை: நடிகர் விவேக் கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மீண்டு வருவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் நாடு முழுக்க கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. காட்டுத் தீ போல் பரவும் கொரோனா வைரஸால் இந்தியா உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் வேகமாக முன்னேறி வருகிறது.

தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4800க்கு மேல் உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையிலும் அதான் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸின் கோரப்பிடியில் இருந்து தப்பித்து விடுவோம் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் நடிகர் விவேக்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இடிபாடுகளுக்கு இடையில் பூச்செடி வளர்வது போன்று நாமும் மீண்டு வருவோம். குப்பைகளுக்கு மத்தியில் வளரும் ரோஜாக்களைப் போல எழுவோம்! நம்பிக்கைதான் நம் உரம்! சுகாதார அறிவுறுத்தலைக் கடைப்பிடிப்பது ஒரு சிகிச்சை!! என பதிவிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications











