இசையின்றி நாட்கள் விடிவதில்லை.. எம்எஸ்வியுடன் எஸ்பிபி.. அரிய போட்டோவை ஷேர் செய்து உருகிய விவேக்!

சென்னை: எம்எஸ்வியுடன் எஸ்பி பாலசுப்ரமணியம் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து நடிகர் விவேக் உருக்கமாக டிவிட்டியுள்ளார்.

Recommended Video

எஸ்பிபியின் பாடலை பியானோவில் வாசித்து பிரார்த்தனை செய்த பிரபல நடிகர்.. வைரலாகும் வீடியோ!

பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்பி பாலசுப்ரமணியம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் காவல் துறை மரியாதையுடன் கடந்த சனிக்கிழமை சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல் அடக்கம் செய்யப்பட்டது.

கலந்துள்ள குரல்

கலந்துள்ள குரல்

எஸ்பிபியின் மறைவை இன்னமும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எஸ்பிபி மறைந்துவிட்டார் என்பதையும் ரசிகர்களால் நம்ப முடியவில்லை. விடியல் முதல் இரவு வரை ஏதாவது ஒரு தருணத்தில் எஸ்பிபியின் குரல் பலரது வாழ்க்கையில் இரண்டரக் கலந்துள்ளது.

விவேக் டிவிட்

விவேக் டிவிட்

எஸ்பி பாலசுப்ரமணியம் உடனான நினைவுகளை பிரபலங்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விவேக் எஸ்பிபி குறித்து உருக்கமான பதிவு ஒன்றறை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

எஸ்பிபியும் எம்எஸ்வியும்

எஸ்பிபியும் எம்எஸ்வியும்

இசையமைப்பாளர் எம்எஸ்வியுடன் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்தப்படி சிரித்து பேசும் போது எடுத்த போட்டோவை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் இந்த விரலில் விளைந்த மெட்டுக்கள்!அந்தக் குரலில் குழைந்த பாட்டுக்கள்! இந்தப் பயணம் முடிவதில்லை: இசையின்றி நாட்கள் விடிவதில்லை! என்றும் விவேக் குறிப்பிட்டுள்ளார்.

குருவை மிஞ்சி விட்டார்

குருவை மிஞ்சி விட்டார்

இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு போட்டோவை பகிர்ந்ததற்கு நன்றி சார் என நடிகர் விவேக்குக்கு நன்றி கூறியுள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள் இந்த குருவுடன் சிஷ்யன்....எம் எஸ் வியின் சாதனைகளில் ஒன்று.... இந்த சிஷ்யன் குணத்தால் குருவை கூட மிஞ்சி விட்டார்... என்றும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X