அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளார் குஷ்பு.. டிரைவர் கவனமாக இருக்க வேண்டும்.. நடிகர் விவேக் டிவிட்!
சென்னை: நடிகை குஷ்பு சென்ற கார் விபத்துக்குள்ளானது குறித்து நடிகர் விவேக் பதிவிட்டுள்ள டிவிட் வைரலாகி வருகிறார்.
நடிகை குஷ்பு அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் நேற்று கடலூரில் நடக்க இருந்த வேல் யாத்திரைக்காக சென்னையில் இருந்து புறப்பட்டார்.
மேல்மருவத்தூர் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் விபத்துக்குள்ளானது. கன்டெயினர் லாரி உரசியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தப்பிய குஷ்பு
இதில் குஷ்பு சென்ற காரின் பின்பக்க கதவு முற்றிலும் சேதமடைந்தது. காரில் குஷ்புவும் அவரது கஸினும் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக நடிகை குஷ்பு இந்த விபத்தில் காயமின்றி தப்பித்தார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நம்பிக்கை உண்மையாகியுள்ளது
தனது கணவர் கும்பிடும் தெய்வம்தான் தன்னை காப்பாற்றியதாகவும் தனது கணவர் சுந்தர் சி முருகனின் மேல் வைத்திருந்த நம்பிக்கை உண்மையாகியுள்ளது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் குஷ்பு.

நடிகர் விவேக் டிவிட்
நடிகை குஷ்புவின் கார் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை குஷ்புவின் கார் விபத்துக்குள்ளானது குறித்து நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

டிரைவர் கவனமாக இருக்கணும்
குஷ்பு இந்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளார் என தெரிகிறது. கவனமாக இருங்கள். ஓட்டுனரையும் மிகவும் கவனமாகவும் விழிப்புடனும் இருக்கச் சொல்லுங்கள். இந்த விபத்தில் எந்த விபரீதத்தையும் ஏற்படுத்தாத கடவுளுக்கு நன்றி' என பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











