மண் மனம் மாறாத நல் மனம்.. வருந்துகிறேன்.. பரவை முனியம்மா மறைவுக்கு கண்ணீர் சிந்திய விவேக்

சென்னை: பரவை முனியம்மாவின் உயிரிழப்பு செய்தியை அறிந்த நடிகர் விவேக், தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Recommended Video

Folk singer Paravai muniyamma passes away

தூள் படத்தின் மூலம் பிரபலமான நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.

50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பரவை முனியம்மா சிகிச்சை பலனின்றி தனது 83வது வயதில் காலமானார்.

செம காம்போ

செம காம்போ

இயக்குநர் தரணி இயக்கத்தில் 2003ம் ஆண்டு சியான் விக்ரம், ஜோதிகா, விவேக் நடிப்பில் வெளியான தூள் படத்தில் பரவை முனியம்மா நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் விவேக்குடன் பரவை முனியம்மா ஒரு சில படங்களில் நடித்து காமெடியில் கலக்கி உள்ளார்.

காதல் சடு குடு

காதல் சடு குடு

தூள் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு படத்திலும் விவேக் உடன் இணைந்து காமெடி காட்சிகளில் அசத்தியிருந்தார் பரவை முனியம்மா. இன்றளவும் காமெடி சேனல்களில் விவேக், பரவை முனியம்மா காம்போவில் வெளியான காமெடி காட்சிகளை வெகுவாக ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

பசுபதி C/o ராசக்காபாளையம்

பசுபதி C/o ராசக்காபாளையம்

தூள், காதல் சடுகுடு படங்களை தொடர்ந்து, விவேக் மற்றும் பரவை முனியம்மா காம்போவில் உருவான மற்றொரு படம் பசுபதி c/o ராசக்காபாளையம். செல்வ பாரதி இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரஞ்சித் ஹீரோவாக நடித்திருப்பார். இந்த படத்தின் காமெடி காட்சிகளும் இன்றளவும் பிரபலம் தான்.

கண்ணீர் சிந்தும் விவேக்

தூள், காதல் சடுகுடு, தமிழ்ப்படம், சவாலே சமாளி, தோரணை, கோவில், வேங்கை, மான் கராத்தே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பரவை முனியம்மா, உடல் நலக் குறைவால் உயிரிழந்த செய்தியை அறிந்த நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், "பரவை முனியம்மா அவர்களுடன் நான் நடித்த காட்சிகள் இன்றும் ரசிக்கப் படுகின்றன. நல்ல கிராமியக் குரல் வளம். மண் மணம் வீசிய நல் மனம். வருந்துகிறேன்." என கண்ணீர் சிந்தும் எமோஜி போட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X