ரவுடி பேபி பாடலை பியானோவில் வாசித்து.. யுவன்சங்கர் ராஜாவுக்கு வாழ்த்து சொன்ன பிரபல நடிகர்!
சென்னை: இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ரவுடி பேபி பாடலை பியானோவில் வசாதித்து நடிகர் விவேக் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விவேக் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதாவது யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளி வந்த ரவுடி பேபி பாடலை பியானோவில் வாசித்து வாழ்த்து கூறியுள்ளார்.

ரவுடி பேபி பாடல்
மாரி 2 படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி நடிப்பில் வெளியான படம் மாரி 2. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இந்தப் படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம்.

பல மில்லியன் வியூஸ்
ரவுடி பேபி பாடலுக்கு நடிகர் தனுஷும் நடிகை சாய் பல்லவியும் போட்டி போட்டு ஆடியிருப்பார்கள். இந்தப் பாடல் பல மில்லியன் வியூஸ்களை குவித்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

பியானோ வாசித்து
இந்நிலையில் அப்படி ஒரு ஹிட் பாடலை தனது பியானோவில் வாசித்து வாழ்த்து கூறியுள்ளார் விவேக். லாக்டவுன் நேரத்தில் படிப்பது, படங்களை பார்ப்பது, உடற்பயிற்சி செய்வதையும் தாண்டி இசைக்கருவியை வாசிப்பதும் பெரும் இன்பம் என்று கூறியிருந்தார் விவேக்.

எஸ்பிபிக்காக வாசிப்பு
கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்பி பாலசுப்ரமணியம் நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது, கேளடி கண்மணி படத்தில் இடம் பெற்ற மண்ணில் இந்த காதலன்றி பாடலை வாசித்து பிரார்த்தனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











