45 வருட கலைப்பயணம்! நீங்கள் ஒரு அசாத்தியம்.. ரஜினியை பார்த்து பிரமிக்கும் பிரபல நடிகர்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் 45 வருட கலைப்பயணத்தை பார்த்து பிரமித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த 45 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
திரை பிரபலங்களை வைத்து காமன் டிபிக்களை வெளியிட வைத்து ரஜினிசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ரஜினியின் 45 ஆண்டு கால கலைப்பயணத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

நீங்கள் ஒரு அசாத்தியம்
அந்த வகையில் நடிகர் விவேக்கும் ரஜினிகாந்தை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், 45 வருட கலைப்பயணம் !! எவ்வளவு அனுபவங்கள் ! சாதனைகள்! சோதனைகள்! படிப்பினைகள் !! நீங்கள் ஒரு அசாத்தியம் ரஜினிகாந்த் சார் என பிரமித்துள்ளார்.

முன்னணி நடிகர்கள்
நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார் விவேக்.

படம் முழுக்க ட்ராவல்
சிவாஜி படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு இணையாக படம் முழுக்க ட்ராவல் ஆகியிருப்பார் நடிகர் விவேக். அந்தப் படத்தின் பல காட்சிகளில் எமோஷனலாகவும் நகைச்சுவையாகவும் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் விவேக்.

அரசியல் வருகைக்கு ஆதரவு
விவேக்கின் சில டைமிங் பர்ஃபாமன்ஸ்களையும் டயலாக்குகளையும் ரஜினியே பாராட்டியிருந்தார். இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை நடிகர் விவேக் ஆதரித்து வருகிறார். இதுதொடர்பாக பல்வேறு கருத்துக்களை கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











