ஜெயம் ரவிக்கும் பிரியங்காவிற்கும் கெமிஸ்ட்ரியை மீறிய விஷயம்.. கலாய்த்த விடிவி கணேஷ்.. கும்பிட்ட ஹீரோ!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்ராஜ், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள பிரதர் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எம் ராஜேஷ். இந்தப் படம் தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி வரும் அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்த தீபாவளி பண்டிகையையொட்டி சிவகார்த்திகேயனின் அமரன், கவினின் ப்ளடி பெக்கர் படங்களுடன் ஜெயம் ரவியின் பிரதர் படமும் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் தனக்கேயுரிய காமெடி கலாட்டாவுடன் குடும்ப சென்டிமெண்டையும் இணைத்துள்ளார் ராஜேஷ். இந்தப் படத்தில் ஜெயம் ரவி மற்றும் பூமிகா இடையிலான பாசத்தை மையமாக வைத்துள்ளார்.

பிரதர் படம்: நடிகர் ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. பிரதர், ஜீனி, காதலிக்க நேரிமில்லை என ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்களின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு படமாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் முதலாவதாக ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்ராஜ், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள பிரதர் படம் வரும் தீபாவளியையொட்டி அக்டோபர் 31ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கியுள்ள நிலையில், காமெடி கலாட்டாவுடன் குடும்ப சென்டிமெண்டையும் அவர் படத்தில் இணைத்துள்ளார்.
பிரதர் பட பிரமோஷன்கள்: தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயனின் அமரன், கவினின் ப்ளடி பெக்கர் ஆகிய படங்களுடன் மோதவுள்ளது பிரதர் படம். இந்த ரேஸில் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படமும் இணைந்துள்ளது. சைரன் படத்தையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் படம் அக்கா மற்றும் தம்பியின் பாசத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பூமிகா, ஜெயம்ரவிக்கு அக்காவாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் இன்றைய தினம் பிரமோஷனல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
கலாய்த்த விடிவி கணேஷ்: இதில் நடிகர் ஜெயம் ரவி, நட்ராஜ், பூமிகா, விடிவி கணேஷ் மற்றும் இயக்குநர் எம் ராஜேஷ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய விடிவி கணேஷ், தனக்கேயுரிய காமெடி சென்சுடன் பேசினார். இந்த படத்தில் நடித்துள்ள நடிகை பிரியங்கா மோகன் தான் மிகவும் லக்கி என்ற பெயரை வாங்கியுள்ளதாகவும் அவரை ஒரு படத்தில் சேர்த்தால் அந்தப் படம் ஹிட் என்ற பெயரை பிரியங்கா பெற்றுள்ளதாகவும் விடிவி கணேஷ் பேசியுள்ளார். தற்போது ஐதராபாத்தில் சூட்டிங்கில் உள்ளதால் அவர் இந்த நிகழ்வில் கலந்துக் கொள்ளவில்லை என்றும் விடிவி கணேஷ் கூறியுள்ளார்.
கும்பிட்ட ஜெயம் ரவி: ஜெயம் ரவிக்கும் பிரியங்கா மோகனுக்கும் இடையில் கெமிஸ்ட்ரியை தாண்டிய ஒரு விஷயம் உள்ளதாகவும் விடிவி கணேஷ் பாராட்டியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக ஒரு மாத காலம் இருவரும் இணைந்து இருந்ததாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். அனைவரும் ஃபேமிலி மாதிரியே பழகியதாகவும் விடிவி கணேஷ் தொடர்ந்து ஜெயம் ரவியை கலாய்க்க, அவரோ, விடிவி கணேஷை பார்த்து கையெடுத்து கும்பிட்டதை பார்க்க முடிந்தது. அவர் சிரித்தபடி சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பதால் பார்ப்பவர்களுக்கு கவலைகள் மறந்துவிடுவதாகவும் விடிவி கணேஷ் பேசியுள்ளார். தொடர்ந்து பிரதர் படத்தில் குடும்பத்துடன் இருக்கும் தன்னை ஜெயம் ரவி தெருவில் கொண்டுவந்து நிறுத்திவிடுவார் என்று கதைக்களத்தையும் வெளிப்படுத்தினார்.


Click it and Unblock the Notifications











