லைட்டா போதை.. யாருன்னே தெரியாத பெண்ணுடன் நடுக்கடலில் ஃப்ரென்ச் கிஸ் அடித்த நடிகர்!

சென்னை: நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் கிஸ். இந்த படத்தை நடன இயக்குநர் சதீஷ் எழுதி இயக்கி உள்ளார். படத்தில் கவின் உடன் பிரீத்தி அஸ்ராணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் நாளை மறுநாள் அதாவது செப்டம்பர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் ப்ரோமோசன் வேலைகள் வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில் நேற்று படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் படத்தில் நடித்த VTV கணேஷ் பேசுகையில், படத்தின் நடிகர் கவின், VTV கணேஷின் முதல் முத்தம் குறித்து கேள்வி கேட்டார். அதற்கு அவர் பதில் அளித்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் பேசுகையில், நானும் எனது நண்பன் சரபோஜியும் வாரத்திற்கு ஒரு முறை மகாபலிபுரம் சென்று கடற்கரையில் அமர்ந்து மது அருந்துவோம். எனது நண்பர் சரக்கே அடிப்பார். நான் பீர் மட்டும் குடிப்பேன். ஒரு பீர் குடித்துவிட்டு மணலில் உருண்டு கொண்டு இருப்பேன். அதிகாலையில் போதை தெளிந்ததும் அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்து விடுவோம்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் நானும் எனது நண்பன் சரபோஜியும் கடற்கரையில் சரக்கு அடித்துக் கொண்டு இருந்தோம். அப்போது அங்கு இரண்டு ஃபிரன்ச் பெண்கள் வந்தார்கள். அவர்கள் இருவரும் கடற்கரையில் குளிக்க செல்வதாகவும், அதனால் அவர்களின் உடைகளை பார்த்துக் கொள்ளும் படியும் சொன்னார்கள். இவர்களைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆசை ஏற்பட்டது.

Actor VTV Ganesh Shares His First Lip to Lip Kiss With Stranger Women At Middle Of The Sea
Photo Credit:

போதையில் சேட்டை: உடனே அவர்களில் ஒரு பெண்ணிடம், எனக்கு ஃபிரன்ச் முத்தம் எப்படிக் கொடுப்பது எனக் கற்றுக் கொடுக்கச் சொன்னேன். உடனே அவரும் எங்களுடன் குளிக்க வந்தா கற்றுக் கொடுக்கிறேன் என்று கூறினார். இப்படி இருக்கையில் இது குறித்து எனது நண்பன் சரபோஜியிடம் எதுவும் கூறாமல், நான் துணிகளை கழட்டிப் போட்டுவிட்டு, அவர்களுடன் கடலுக்குள் சென்று விட்டேன். இப்படி இருக்கும் கடலுக்குள் இருந்து கொண்டு எனது நண்பனை பார்த்தால் மிகவும் சிறிய அளவில் தெரிகிறான். தண்ணீரும் கழுத்து அளவுக்கு வந்து விட்டது.

நடுக்கடலில் முத்தம்: நான் உடனே அந்த பெண்களிடன் எனக்கு முத்தம் கொடுக்க கற்றுக் கொடுப்பது என்றால் கற்றுக் கொடுங்கள் இல்லை என்றால் நான் கரைக்குப் போகிறேன் என்று கூறினேன். அதன் பின்னர் அவர்கள் இருவரும் மாறி மாறி நீ கொடு, நீ கொடு என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள். எனக்கு கால் தரையில் படவில்லை, நான் மிதந்து கொண்டு இருக்கிறேன். நான் முதலில் கேட்ட பெண்ணே எனக்கு முத்தம் கொடுத்தார். நான் கருப்பாக இருந்தாலும் ஒரு மாதிரியாக இருக்கான் என்று நினைத்து ஒரு கிஸ் அடுச்சு விட்டா பாருங்க, அந்த கிறக்கத்தில் நான் கடலுக்குள் சென்று ஒன்றரை லிட்டர் உப்புத் தண்ணீரைக் குடித்து விட்டேன்.

யாருன்னே தெரியாத பெண்ணுடன்: இதுதான் எனது முதல் கிஸ். அதன் பின்னர் அதில் ஒரு பெண்ணின் முதுகில் தொத்திக் கொண்டு கால் படும் தூரம் வரை வந்து, அதன் பின்னர் நான் கரைக்கு வந்துவிட்டேன். நாம் கிஸ் அடிப்பதில் மிகவும் சென்சிட்டிவான பாகமான உதட்டை சரியாக பயன்படுத்துவதில்லை" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சைக் கேட்ட பலரும் யார் என்றே தெரியாத ஃபிரன்ச் பெண்ணிடம் நடுக்கடலில் போதையில் இருந்து கொண்டே லிப் டூ லிப் கிஸ் வாங்கி உள்ளாரே என்று பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X