ஜன நாயகன் லீக்கான பிறகு எவன் பார்ப்பான்.. ப்ளூ சட்டை பார்த்து இருப்பாரு.. VTV கணேஷ்!

சென்னை: தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தனது தீவிர அரசியல் பயணத்திற்காகத் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்த விஜய், ஜன நாயகன் தான் தனது கடைசி திரைப்படம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவே மாறி உள்ளார் விஜய்.

கடந்த ஜனவரி மாதமே ரிலீஸாக வேண்டிய 'ஜன நாயகன்' திரைப்படம், சென்சார் பிரச்சனைகள் மற்றும் பல தடைகளைத் தாண்டி, கிட்டத்தட்ட 7 மாத காத்திருப்புக்குப் பிறகு வரும் ஜூலை 23-ஆம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. படத்தின் ரிலீஸை ஒரு திருவிழா போலக் கொண்டாட விஜய்யின் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் தயாராகிவிட்டதால் இணையதளம் முழுவதும் 'ஜன நாயகன்' ஃபீவர் தான் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது.

லீக்கான பிறகும் பாக்கல: சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட VTV கணேஷ், ஜன நாயகன் படம் குறித்துப் பேசினார். ஜன நாயகன் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பே இணையத்தில் லீக் ஆகி, முழுப் படமும் கசிந்துவிட்டது. ஆனால், விஜய்யின் உண்மையான ரசிகர்கள் யாரும் படத்தைப் பார்க்கவே இல்லை. தளபதியின் படத்தை தியேட்டரில் தான் போய் பார்ப்போம் என்று ஒட்டுமொத்த ரசிகர்களும் உறுதியாக நின்றுவிட்டார்கள். இதைக் கேள்விப்பட்டதும் நான் உண்மையிலேயே ஆடிப் போய்விட்டேன்.

Jana nayagan Vijay VTV Ganesh
Photo Credit:

ப்ளு சட்டை பார்த்து இருப்பாரு: ஆனால், இணையத்தில் லீக்கான படத்தை ஒரு சிலர் பார்த்தார்கள். அவர்கள் யார் தெரியுமா? அம்மா அப்பா சம்பாதித்து வைத்தப் பணத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் சில சோம்பேறிகள் தான் அந்தப் படத்தைப் பார்த்தார்களே தவிர, விஜய்யின் தீவிரமான, உண்மையான ரசிகன் யாரும் பாக்கல, அனேகமாக அந்த புளூ சட்டை கூட லீக்கான இந்த படத்தைப் பார்த்து இருப்பாரு என்று நக்கலாகக் கூறி கலாய்த்தார். தொடர்ந்து பேசிய VTV கணேஷ், இதுபோன்ற மாஸ் நடிகர்களின் படம் வரும்போது, நம்மை அறியாமலேயே ஒரு ஆர்வம் வந்துவிடுகிறது. விஜய் என்பதால் தான் இப்படத்திற்கு இவ்வளவு பெரிய பிரம்மாண்ட வரவேற்பு கிடைக்கிறது. இதே நமது படம் என்றால் இப்படிப்பட்ட வரவேற்பு கண்டிப்பைக் கிடைக்காது. சிலருக்கு இயல்பாகவே கைராசி இருக்கிறது. ஜனநாயகன் படம் குறித்து வெளியில் வரும் தகவல்களையும் அதன் வியாபாரத்தையும் கேள்விப்படும்போது கூஸ்பம்ஸாக இருக்கிறது எனறு விடிவி கணேஷ் பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X