Jailer Audio Launch: காவாலா பாட்டு கேட்டா சும்மா கிளுகிளுப்பா இருக்கு.. விடிவி கணேஷ் பேச்சு!
சென்னை : காவாலா பாட்டு கேட்டா சும்மா கிளுகிளுப்பா இருக்கு. என்று ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் விடிவி கணேஷ் பேசிஉள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மற்றும் விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். ஆக்ஷன் படமாக தயாராகி வரும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ரஜினியின் மனைவியாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
விடிவி கணேஷ் பேச்சு: ஜெயிலர் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த மாதம் ஜூலை 28ந் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த விழாவில் பேசி விடிவி கணேஷ், ஜெயிலர் பட ஷூட்டிங்கிற்கு காலையில் வந்த ரஜினிகாந்த், ஷூட்டிங் முடியும் வரை கேரவனுக்கு போகவே இல்லை. வெயிலில் அப்படியே உங்காந்து இருக்கிறார்.
கிளுகிளுப்பா இருக்கு: மேலும், தமன்னா ஆடிய காவாலா பாடலை டெய்லி 10 முறையாவது பார்த்துவிடுவேன். அந்த பாடலை கேட்டா சும்மா கிளுகிளுப்பா இருக்கு. என்று ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் விடிவி கணேஷ் பேசி உள்ளார். காவலா பாடல் யூடியூப்பில் மட்டும் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் காவாலா, ஹுக்கும், ஜுஜுப்பி மற்றும் ரத்தமாரை ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











