Don't Miss!
- News
கவனம் மக்களே! சென்னையில் அடுத்த 6 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. எங்கே தெரியுமா
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Finance
'மசாஜ்' எல்லாம் இனி கிடையாது.. சுந்தர் பிச்சை எடுத்த முடிவு.. டிவிட்டர் போலக் கூகுள்..!
- Sports
ஐபிஎல்-க்கு முன் உள்ள கடைசி டி20.. 3 முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹர்திக்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
தயாரிப்பாளர் தில் ராஜுக்கு விடிவி கணேஷ் கற்றுக் கொடுத்த பாடம்.. வாரிசு சக்சஸ் மீட்டில் கலகலப்பு!
சென்னை : நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 11ம் தேதி சர்வதேச அளவில் வாரிசு படம் ரிலீசாகியுள்ளது.
படம் வெளியான சில தினங்களிலேயே 100 கோடி ரூபாய் கிளப்பில் தற்போது இணைந்துள்ளது.
படம் அஜித்தின் துணிவு படத்துடன் மோதிய நிலையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.
Varisu
box
office
worldwide:
வசூலில்
சதமடித்த
விஜய்...
ரசிகர்கள்
கொடுத்த
ஆட்ட
நாயகன்
விருது

விஜய்யின் வாரிசு படம்
நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷாம், விடிவி கணேஷ், பிரபு, சரத்குமார், ஜெயசுதா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது வாரிசு படம். இந்தப் படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் படமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

குடும்ப சென்டிமெண்ட் படம்
இந்தப் படம் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள நிலையில், படத்தில் வழக்கம்போல காமெடி, ஆக்ஷன் என கலந்துக் கட்டி தன்னுடைய ரசிகர்களை திருப்தி படுத்தியுள்ளார் விஜய். படத்தில் பாடல்களிலும் தன்னுடைய சிறப்பான நடனத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த வாரிசு
ஆயினும் இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருந்தபோதிலும் படம் வசூலில் பட்டையை கிளப்பி தற்போது 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இதையொட்டி படக்குழுவினருக்கு நடிகர் விஜய் ரகசியமாக சக்சஸ் பார்ட்டி வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரகசியமாக நடந்த சக்சஸ் மீட்?
தமிழ்நாட்டில் மட்டுமே வாரிசு படம் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் சக்சஸ் மீட்டும் தற்போது நடத்தப்பட்டுள்ளது. சென்னை ஈசிஆரில் ஒரு ரெசார்ட்டில் இந்த சக்சஸ் பார்ட்டி நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சக்சஸ் பார்ட்டியில் ராஷ்மிகா மந்தனா, படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், விடிவி கணேஷ் உள்ளிட்ட முக்கிய நபர்கள் மட்டுமே கலந்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிழ்ச்சியில் விஜய்
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வம்சி படிப்பள்ளி, தன்மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை விஜய் கொடுத்ததாகவும், இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் அவரை சந்தித்த தான், படம் குறித்து அவரிடம் விசாரித்ததாகவும் அவர் படத்தின் சக்சஸ் குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தில் ராஜூவிற்கு பாடம்
நிகழ்ச்சியில் பேசிய விடிவி கணேஷ், தயாரிப்பாளர் தில் ராஜூவின் தமிழ் குறித்து நகைச்சுவையாக கமெண்ட் செய்திருந்தார். தமிழக மக்களிடம் அது இது என்று பேசக்கூடாது என்றும் அவங்க இவங்க என்றுதான் பேச வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் தில் ராஜூவிற்கு தான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் கற்றுக் கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.