திரைப்பட சங்கத்தில் இருந்து வில் ஸ்மித் விலகல்...அய்யா பாவம்...இவர் நிலைமை இப்படியா ஆகணும்?

நியூயார்க் : ஹாலிவுட் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் கழகத்தில் இருந்து தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். இதற்கான காரணத்தையும் அவர் விளக்கமாக அளித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித், ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். சமீபத்தில் நடந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், King Richard படத்தில் தனது கேரக்டரில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.

மேடையில் பளார் விட்ட ஸ்மித்

மேடையில் பளார் விட்ட ஸ்மித்

அதே ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், விருது பெறுவதற்கு முன், தனது மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் மொட்டை தலையுடன் இருப்பதை கேலி செய்யும் விதமாக காமெடி நடிகர் கிறிஸ் ராக் பேசியதற்காக மேடையில் வைத்து ஸ்மித் அவரை முகத்தில் அறைந்தார். இந்த சம்பவம் மிகப் பெரிய பரபரப்பை கிளப்பியது. இது நடந்த அரை மணி நேரத்திலேயே, விருதை வாங்கி விட்டு மிக உருக்கமாக பேசினார் ஸ்மித்.

மன்னிப்பு கேட்ட ஸ்மித்

மன்னிப்பு கேட்ட ஸ்மித்

கிறிசை அறைந்த சம்பவத்திற்காக மேடையிலேயே ஆஸ்கார் அகாடமியிடம் மன்னிப்பு கேட்டார் ஸ்மித். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கிறிசிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டார் ஸ்மித். இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஸ்மித். ஆஸ்கார் விழாவில் ஸ்மித் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சி அளிப்பது, வலியானது மற்றும் மன்னிக்க முடியாதது என சினிமா அகாடமியும் தெரிவித்துள்ளது..

திரைப்பட சங்கத்திலிருந்து விலகல்

திரைப்பட சங்கத்திலிருந்து விலகல்

இது பற்றிய ஸ்மித் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகாடமியின் நம்பிக்கையை நான் உடைத்து விட்டேன். மற்ற நடிகர், நடிகைகளின் பரிந்துரைகள், வெற்றியாளர்களின் கொண்டாட்டம் ஆகியவற்றிற்கான வாய்ப்பை நான் கெடுத்து விட்டேன். நான் மிகவும் மன வேதனை அடைகிறேன்.அதனால் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் கழகத்தின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். அகாடமி எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Recommended Video

Will Smith Chris Rockஐ Oscar Stage-ல் அறைந்தது ஏன்? | Filmibeat Tamil
இன்னும் முடியலியா பிரச்சனை

இன்னும் முடியலியா பிரச்சனை

ஸ்மித்தின் ராஜினாமா பற்றி திரைப்பட அகாடமியின் தலைவர் டேவிட் ரூபின் கூறுகையில், ஸ்மித்தின் ராஜினாமாவை குழு ஏற்றுக் கொண்டது. ஆனாலும் அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் தொடரும். ஸ்மித் மீது கூடுதல் தடைகள் விதிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி ஏப்ரல் 18 ம் தேதி நடக்கும் சங்கத்தின் அடுத்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X