யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கேஜிஎப்3 குறித்து அப்டேட் தெரிவித்த தயாரிப்புத் தரப்பு!
சென்னை : நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் அவரை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.
இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை நடிகர் யாஷ் கொண்டாடி வருகிறார்.
இதையொட்டி கேஜிஎப் 3 படத்தின் அப்டேட்டை ஹோம்பாலே வெளியிட்டுள்ளது. இது யாஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

நடிகர் யாஷ்
நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 இரண்டு படங்களும் சர்வதேச அளவில் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றன. இந்த இரண்டு பாகங்களையும் ஹோம்பாலே நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் மூன்றாவது பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தொடர்ந்து வருகிறது.

கேஜிஎப் 3 குறித்த எதிர்பார்ப்பு
முன்னதாக கேஜிஎப் இரண்டாவது பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தப் படத்தின் மூன்றாவது பாகம் குறித்த அறிவிப்பை ஹோம்பாலே மேற்கொண்டது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இதனிடையே இந்தப் படங்களின் இயக்குநர் பிரஷாந்த் நீல் தன்னுடைய அடுத்தப் படத்தில் பிசியாகியுள்ளார். இதனிடையே அவர் கேஜிஎப் 3 படத்தை இயக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரசிகர்களை கவர்ந்த கேஜிஎப் 2 படம்
கடந்த ஆண்டில் வெளியான கேஜிஎப் 2 படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முந்தைய பாகத்தை காட்டிலும் இந்தப் படம் மிகவும் சிறப்பாக அமைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்தப் படத்தில் யாஷிற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். சஞ்சய் தத் வில்லனாக மிரட்டியிருந்தார். மேலும் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்
இதனிடையே இன்றைய தினம் நடிகர் யாஷ் தன்னுடைய 47வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறர். அவருடைய பிறந்தநாளையொட்டி அவரது நடிப்பில் உருவாகவுள்ள சயின்ஸ் பிக்ஷன் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கேஜிஎப் படங்களை தயாரித்த ஹம்பாலே நிறுவனம் அந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளது.

கேஜிஎப் 3 குறித்து ஹம்பாலே அப்டேட்
யாஷ் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள கேஜிஎப் 3 படம் குறித்த தகவலை தற்போது ஹம்பாலே தெரிவித்துள்ளது. இன்றைய தினம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் யாஷ் பிறந்தநாளையொட்டி வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள ஹம்பாலே, கேஜிஎப் 2 படம் குறித்தும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. கேஜிஎப் 2 படம் அற்புதமானது என்றும் கூறியுள்ளது.

விரைவில் அடுத்த மான்ஸ்டர்
விரைவில் அடுத்த மான்ஸ்டரும் காத்திருப்பதாக ஹம்பாலே தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளது. மேலும் கனவு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து அதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்ற ராக்கிங் ஸ்டார் யாஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் இந்த ஆண்டு அவருக்கு அற்புதமான ஆண்டாக அமையவும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











