ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகிறதா, மெகா பட்ஜெட் படங்களான ஆர்ஆர்ஆர், கே.ஜி.எஃப் 2 ? என்ன சொல்கிறார் யஷ்?

By

சென்னை: ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படமும் கே.ஜி.எஃப் 2 படமும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Recommended Video

KGF Chapter 2 First Look | Trailer Update | Yash | Sanjay Dutt | Prashanth Neel

கன்னட ஹீரோ யஷ் நடித்த 'கே.ஜி.எஃப்' படம் தமிழ் உட்பட 5 மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், சூப்பர் ஹிட்டானதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது.

பிரதமராக

பிரதமராக

முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற வில்லனாக நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி இதிலும் ஹீரோயின். ரவீனா டாண்டன் பிரதமராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ரிலீஸ் தள்ளி வைப்பு

ரிலீஸ் தள்ளி வைப்பு

முதல் பாகத்தை தமிழில் வெளியிட்ட விஷால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் வெளியிடுகிறார். இந்தப் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் ஜூலை மாதம், 5 மொழிகளில் இந்தப் படம் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின.

ராஜமவுலி

ராஜமவுலி

இந்தப் படமும், ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படமும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகப் போவதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா இணைந்து நடிக்கின்றனர். சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சித்ராமஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை கொண்ட படம் இது. ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார்.

ஹாலிவுட் நடிகர்கள்

ஹாலிவுட் நடிகர்கள்

இதில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஆலியா பட் உட்பட பலர் நடிக்கின்றனர். ஹாலிவுட் நடிகர்கள் சிலரும் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அதே தேதியில், கே.ஜி.எஃப் சாப்டர் 2 படமும் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் ஒரே நாளில் 2 பெரிய பட்ஜெட் படங்கள் மோதுவது சரியாக இருக்காது என்றும் பரபரப்பாகச் செய்திகள் வெளியாயின.

உண்மை இல்லை

உண்மை இல்லை

இந்நிலையில் இதை மறுத்துள்ளார், கே.ஜி.எஃப் ஹீரோ யஷ். இரண்டு படமும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகாது. ஒன்றாக ரிலீஸ் ஆக இருப்பதாக வரும் தகவலில் உண்மை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும் கே.ஜி.எஃப் சாப்டர் 2 படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று அவர் தெரிவிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X