Actor Yash: தேசிய அரங்கில் கன்னட சினிமா ஒளிரும் தருணம்.. கேஜிஎஃப் ஹீரோ யாஷ் சிலிர்ப்பு!
பெங்களூர்: கடந்த 2022ம் ஆண்டிற்கான 70வது தேசிய விருதுகள் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் பொன்னியின் செல்வன் மற்றும் திருச்சிற்றம்பலம் படங்கள் விருதுகளை பெற்றுள்ள நிலையில் கன்னடத்திலும் காந்தாரா, கேஜிஎஃப் 2 படங்கள் விருதுகளை குவித்துள்ளன.
கேஜிஎஃப் படம் மூலம் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர் யாஷ். இந்தப் படத்தின் வரவேற்பிற்கும் வசூலுக்கும் காரணமாக அமைந்தவர். இந்நிலையில் தேசிய விருது பெற்ற அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை யாஷ் பகிர்ந்துள்ளார். மேலும் கன்னட சினிமா ஒளிரும் தருணம் இது என்றும் அவர் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

70வது தேசிய விருதுகள்: கடந்த 2022ம் ஆண்டிற்கான 70வது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் பொன்னியின் செல்வன் மற்றும் திருச்சிற்றம்பலம் படங்கள் தேசிய விருதுகளை கட்டி தூக்கியுள்ள சூழலில் கன்னடத்தில் காந்தாரா, கேஜிஎஃப் படங்கள் அதிகமான தேசிய விருதுகளை அள்ளியுள்ளன. மலையாளத்திலும் ஆட்டம் போன்ற படங்கள் சிறப்பான விருதுகளை பெற்றுள்ளன. தமிழில் பொன்னியின் செல்வன் படம் சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர் என நான்கு விருதுகளை பெற்றுள்ளன. இதேபோல திருச்சிற்றம்பலம் படமும் சிறந்த நடிகை மற்றும் சிறந்த நடன இயக்குநர் என இரண்டு விருதுகளை அள்ளியுள்ளன.

யாஷ் வாழ்த்து: இதே போல கன்னடத்தில் கேஜிஎஃப் சாப்டர் 2 மற்றும் காந்தாரா படங்கள் இந்த ஆண்டு தேசிய விருதுகளை குவித்துள்ளன. இது குறித்து தொடர்ந்து பல்வேறு தரப்பினும் தங்களது பாராட்டுக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கேஜிஎப் 1 மற்றும் 2 படங்களின் நாயகன் யாஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தேசிய விருதுகளை பெற்றுள்ள அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கன்னட சினிமா இந்திய அளவில் கவனத்தைப் பெற்றுள்ள தருணம் இது என்றும் அவர் தன்னுடைய பாராட்டுகளை கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் கவனம்: கேஜிஎப் 1 மற்றும் 2 படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தவை. இந்த படங்களை பிரசாந்த் நீல் இயக்கியிருந்த நிலையில் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை மட்டுமில்லாமல் வசூலையும் குவித்தது. இந்த படத்தின் மூன்றாவது பாகம் விரைவில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் ரசிகர்கள் அந்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையே தேசிய விருதுகளை பெற்ற அனைத்து தரப்பினருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து உள்ள நடிகர் யாஷ், குறிப்பிட்டு ரிஷப் ஷெட்டி, ஹம்பாலே தயாரிப்பாளர் கிரகாந்தூர், பிரசாந்த் நீல் உள்ளிட்டவர்களை தனித்தனியாக குறிப்பிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
கன்னட சினிமா ஒளிரும் தருணம்: மேலும் ஒட்டுமொத்த ஹம்பாலே டீமிற்கும் அவர் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இன்னும் அடைய வேண்டிய சாதனைகள் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ள யாஷ் தேசிய அளவில் கன்னட சினிமா ஒளிரும் தருணம் இது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். முன்னதாக கேஜிஎஃப் படங்கள் சர்வதேச அளவில் ஹாலிவுட்டிற்கே சவால் விடும் வகையில் அமைந்திருந்ததாக பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சில படங்களில் நடித்திருந்தாலும் யாஷ் கேரியர் பெஸ்ட்டாக இந்தப் படங்கள் அமைந்திருந்தன.


Click it and Unblock the Notifications











