Yash: கேஜிஎப் நாயகன் யாஷை இயக்கும் தமிழ் டைரக்டர்.. அட இவரா!

சென்னை: பல ஆண்டுகளாக கன்னட திரையுலகில் மிக முக்கியமான நடிகராக ரசிகர்களை கவர்ந்து வந்தவர் நடிகர் யாஷ்.

இவரது வாழ்க்கையில் கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 படங்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி சர்வதேச அளவில் அங்கீகாரத்தை உருவாக்கியுள்ளது.

கேஜிஎப் 2 படத்தின் ரிலீசையடுத்து பல மாதங்கள் ஆன நிலையிலும் யாஷ் தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை மேற்கொள்ளாமல் உள்ளார்.

Actor Yash going to Join Tamil movie director After KGF 2

கேஜிஎப் 2 படத்தை தொடர்ந்து தமிழ்ப்பட இயக்குநருடன் இணையும் யாஷ்: கன்னட திரையுலகில் மாஸ் ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தவர் நடிகர் யாஷ். இவருக்கு சிறப்பாக கைகொடுத்தப்படம் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 படங்கள். கன்னட திரையுலகில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த இவர்கள் இருவரையும் சர்வதேச அளவில் இந்தப் படங்கள் கொண்டு சென்றன. கேஜிஎப் 2 படம் சர்வதேச அளவில் 1500 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து பல மாதங்கள் கடந்த நிலையிலும் தன்னுடைய அடுத்தப்படத்தின் அறிவிப்பை மேற்கொள்ளாமல் உள்ளார் யாஷ். இதுகுறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தவண்ணம் உள்ளனர். பிரஷாந்த் நீல் பிரபாஸ் நடிப்பில் தன்னுடைய அடுத்தப்படமான சலார் படத்தின் சூட்டிங்கை முடித்துள்ளார். படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் யாஷ் நடிப்பில் அடுத்தப்பட அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதனிடையே, யாஷ் அடுத்ததாக தமிழ் பட இயக்குநரின் இயக்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்த்தியின் சர்தார் படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பிப் பார்க்க செய்த இயக்குநர் பிஎஸ் மித்ரன் தான் அடுத்ததாக யாஷை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தியின் கேரியரில் சிறப்பாக அமைந்த படம் சர்தார். இந்நிலையில் யாஷ் -மித்ரன் கூட்டணி சிறப்பாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக சர்தார் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாகவும் அதையும் மித்ரன் தான் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது யாஷ் இயக்கத்தில் மித்ரன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த இரு படங்களில் மித்ரன் எந்தப் படத்தில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதில் எந்தக் கூட்டணி அமைந்தாலும் அது ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பாகவே அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

முன்னதாக நிலேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணத்தை மையமாக கொண்ட படத்தில் யாஷ் ராவணனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தில் நடிக்க யாஷ் விருப்பப்பட்டதாகவும் ஆனால் தான் எதிர்மறை கேரக்டரில் நடிப்பதை தன்னுடைய ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால் அவர் நடிக்க மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ரசிகர்களின் விருப்பத்திற்கு மாறாக தான் நடிக்க விரும்பவில்லை என்றும் அவர் தனது பேட்டியொன்றில் கூறியிருந்தார். இந்நிலையில் மித்ரன் இயக்கத்தில் அவர் அதிரடி ஆக்ஷன் கதையில் இணையவுள்ளது அவரது ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X