கேஜிஎஃப் 2 பிரம்மாண்டமாக OTTல் வெளியாகிறதா? யாஷ் விளக்கம் !

பெங்களூரு: நடிகர் யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் சாப்டர் ஒன் மிகப் பிரம்மாண்டமாக பல மொழிகளில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது.

வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை இந்த படக்குழு இப்பொழுது தயாரித்து வெளியிட உள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டாம் பாகம் OTT ல் வெளியிடப்படுகிறது என பல நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உளவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக யாஷ் பதிலளித்துள்ளார்.

ராக்கி பாய்

ராக்கி பாய்

கன்னட திரைப்படத் துறையில் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட கேஜிஎப் பாகம் 1 திரைப்படம் உலகெங்கிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வந்தது அதே சமயம் வெளியான அனைத்து இடங்களிலும் வசூல் சாதனையை செய்தது. பாகுபலி, எந்திரன் போன்று மிக வித்தியாசமாக மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாகி சக்கைப் போடு போட்டது. இதில் கதாநாயகனாக நடித்த யாஷ் ராக்கி என்ற கதாபாத்திரத்தில் வந்து மிரட்டி தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

கேள்விக்குறி

கேள்விக்குறி

இந்நிலையில் பாகம்-1 மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் பாகம்-2 தயாரிக்கப்பட்டு வருவதாக படக்குழுவினர் சில மாதங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. இதன் பாகம்-2 எப்போது வரும் என்று ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த நிலையில் இந்த படக்குழு பாகம் இரண்டை 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்படுவதாக சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் அக்டோபர் மாதத்திற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த படம் தியேட்டரில் வெளியிடப்படுமா என்ற கேள்விக்குறி அனைவரும் மத்தியில் இருக்கும் வேளையில், அதே சமயம் இந்த படம் OTT ல் வெளியாகிறது என சில செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தியேட்டரில் ரிலீஸ்

தியேட்டரில் ரிலீஸ்

இதனால் பலரும் குழப்பம் அடைந்துள்ள நிலையில் இந்த சந்தேகங்களுக்கு அந்தப் படத்தின் கதாநாயகன் யாஷ் தற்போது பதில் அளித்துள்ளார். அதில் கேஜிஎஃப் படத்தின் பாகம் 2 படப்பிடிப்புக்கள் பெரும்பாலும் முடிவடைந்த நிலையில் கூடிய விரைவிலேயே இது தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படும் மேலும் இந்த படம் ஒரு மிகப்பெரிய படைப்பாகும் இதனை எடுக்கும்போதே தியேட்டரில் பார்த்து ரசிக்கும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவே இந்த படம் கண்டிப்பாக திரையில் தான் வெளியிடப்படும் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பிரமிக்கவைக்கும்

பிரமிக்கவைக்கும்

கேஜிஎஃப் பாகம் ஒன்றில் நீங்கள் பார்த்ததை விட பாகம் இரண்டில் பலமடங்கு பிரம்மாண்டம் கூட்டப்பட்டுள்ளது. பாகம் 2 கண்டிப்பாக உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை பிரமிக்கவைக்கும் வைக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை என அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த படத்தில் புதிதாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்திருப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. இந்த படம் அக்டோபர் மாதம் 23ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அப்படக்குழு ஏற்கனவே ஒரு தேதியை தெரிவித்திருந்த நிலையில் தற்போது உள்ள சூழ்நிலையில் குறிப்பிட்ட தேதியில் திரையில் வெளியிடப்படுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X