ராமாயணம் படத்திற்கு யாஷின் சம்பளம் இத்தனை கோடியா? வாய் பிளந்த ரசிகர்கள்!

சென்னை: யாஷ் என்ற பெயரை உச்சரிக்காத உதடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு கேஜிஎஃப் படத்தின் மூலம் இமாலய உச்சத்திற்கு சென்று விட்டார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவரின் சம்பளம் பல மடங்கு உயர்ந்துவிட்டது. தற்போது இவர், 'ராமாயணம்’ படத்​தில் ராவணனாக நடித்து வருகிறார். இதற்காக இவருக்கு ரூ.200 கோடிக்​கு சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெறும் 300 ரூபாயுடன் வீட்டை விட்டு ஓடிவந்த யாஷ், ஸ்டாராக வேண்டும் என்ற ஆசையில், கடுமையாக உழைத்து, கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்து படிப்படியாக தன்னை தயார்படுத்திக் கொண்டார். பல கட்டபோராட்டங்களுக்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. பல சோதனைகள், பல அவமானங்கள், பல கேலிப் பேச்சுகள் அனைத்தையும் கடந்து இன்று உலகமே வியந்து பார்க்கும் உயர்ந்த இடத்தில் கம்பீரமாக அமர்ந்து இருக்கிறார் யாஷ்.

yash ramayana salary

யாஷ்: கேஜிஎஃப் முதல் பாகத்தில் கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்தில் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் யாஷ். திடமான தேகம், ஷார்ப்பான பார்வை, மிரட்டலான நடிப்பு, அம்மாவுக்காக பறிதவிக்கும் மனம் என ஒவ்வொரு காட்சியிலும், யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்து இருப்பார். கே.ஜி.எஃப் பார்ட் 2 அனைத்து திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளியது.

ராமாயணம்:தற்போது யாஷ், நிதேஷ் திவாரி இயக்​கும் 'ராமாயணம்’ படத்​தில் ராவணனாக நடித்து வருகிறார். இதில் ரன்பீர் கபூர் ராமராக​வும் சாய் பல்லவி சீதை​யாக​வும் நடிக்​கின்​றனர். ரகுல் ப்ரீத் சிங், லாரா தத்தா, சன்னி தியோல் என முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்​களாக தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அதிக சம்பளம்: நமித் மல்ஹோத்​ரா​வின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் நிறு​வனம், நடிகர் யாஷின் மான்ஸ்​டர்​மைண்ட் கிரியேஷன்​ஸுடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், நடிகர் யாஷின் சம்பளம்,ரூ.200 கோடி என்று செய்தி வெளியாகி உள்ளது. பொதுவாக படத்தில் ஹீரோவாக நடிக்கும் நடிகர்களுக்குத்தான் அதிக சம்பளம் வழங்கப்படும். ஆனால், ராமாயண படத்தில் வில்லனாக நடிப்பதற்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. கோலிவுட்டில் விஜய், தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜூன், கன்னட சினிமாவில் யாஷ் போன்றவர்கள் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களாக இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X