Yash 19 movie: என்னது யாஷ் 19 படத்துல அவருக்கு 3 ஜோடியா.. அடி தூள்!
சென்னை: நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படங்கள் அவருக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தன.
இதையடுத்து அவரது யாஷ்19 படம் குறித்த எதிர்பார்ப்பை இந்தப் படங்கள் ஏற்படுத்தின. ஆனாலும் அடுத்தப்படத்தையும் சிறப்பாக கொடுக்க வேண்டி அதிகமான கதைகளை யாஷ் நிராகரித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் பிரபல மலையாளப் பட இயக்குநர் கீது மோகன்தாசுடன் யாஷ் இணையவுள்ளது உறுதியாகியுள்ளது. படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது
நடிகர் யாஷ்: கேஜிஎப், கேஜிப் 2 ஆகிய படங்களின் மூலம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளார் நடிகர் யாஷ். முன்னதாக கன்னடத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படங்கள் யாஷிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளன. இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்திருந்த இந்தப் படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியான நிலையில் பான் இந்தியா ஸ்டாராகவும் உயர்ந்துள்ளார் யாஷ். குறிப்பாக கேஜிஎப் 2 படம் மிகப்பெரிய வசூலை பெற்றது.
யாஷ் 19 படம்: இந்நிலையில் யாஷின் அடுத்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து ரசிகர்களிடையே இருந்து வந்தது. கேஜிஎப் படங்களின் வெற்றியை தன்னுடைய அடுத்தப்படத்திலும் நீட்டிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த யாஷ், அடுத்தப்படத்திற்காக அதிகமான இயக்குநர்களிடம் கடந்த சில மாதங்களாக கதை கேட்டு வந்தார். ஹாலிவுட் இயக்குநருடன் அவர் கூட்டணி அமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது யாஷ் 19 படம் உறுதியாகியுள்ளது.

இயக்குநர் கீது மோகன்தாஸ்: இந்தப் படத்தை பிரபல மலையாளப்பட இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கவுள்ளார். படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை வெளியாகவுள்ளதாக யாஷ் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் யாஷிற்கு ஜோடியாக 3 நாயகிகள் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் மூவரும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் படத்தின் அறிவிப்புடன் நாயகிகள் குறித்தும் அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் தெவிக்கின்றன.
ஆக்ஷன் திரில்லராக உருவாகும் யாஷ்19: ஆக்ஷன் திரில்லராக உருவாகவுள்ள இந்தப் படத்தில் மீண்டும் கேங்ஸடராக யாஷ் நடிக்கிறார் என்றும் தகவல்கள் உலா வந்துக் கொண்டிருக்கின்றன. இந்த மாத இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் இந்தப் படத்தின் சூட்டிங்கை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் 2025ல் ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ளது. நாளைய தினம் டைட்டில் வெளியாகவுள்ள நிலையில் கேஜிஎப் டைட்டிலை போல இந்தப் படத்தின் டைட்டிலும் ரசிகர்களை கவருமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கேஜிஎப் அடுத்தடுத்த பாகங்கள்: ஜேம்ஸ்பாண்ட் சீரிஸ் போல கேஜிஎப் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க தயாரிப்புத் தரப்பு திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்தப் படத்தின் அடுத்த பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தப் படத்தை பிரஷாந்த் நீல் இயக்கப் போவதில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்கான வேலைகள் 2025ம் ஆண்டில் துவங்கும் என்றும் முன்னதாகவே கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது யாஷ்19 படம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











