நடிகர் விஜய் கட்சியை கேலி செய்கிறதா யோகி பாபு படம்? வெளியான போஸ்டரால் கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்

சென்னை: நடிகர் "யோகி பாபு" மற்றும் நடிகர் "செந்தில்" இணைந்து நடித்திருக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது. அந்த திரைப்படத்திற்கு "குழந்தைகள் முன்னேற்ற கழகம்" என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சங்கர் தயாள் இயக்குகிறார்.

இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியானதும் ரசிகர்கள் இது சமீபத்தில் நடிகர் "விஜய்" தொடங்கிய "தமிழக மக்கள் கழகம்" என்ற கட்சியை கலாய்த்து இவர்கள் எப்படி ஒரு தலைப்பு வைத்திருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

actor Yogi Babu and Senthil new movie Kuzhanthaigal munnetra kazhagam poster released vijay fans angry

நகைச்சுவையை விரும்பாதவர்கள் இந்த உலகத்தில் உண்டா? என்று கேட்டால் அதிகமானோர் இல்லை என்று தான் சொல்வார்கள். அந்த காலம் முதல் இந்த காலம் வரை நகைச்சுவைக்கு அதிகமான முக்கியத்துவமும் அவசியமும் இருக்கிறது. அதனாலேயே சினிமாக்களில் கூட அதிகமான காமெடி நடிகர்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கின்றனர்

அந்த வகையில் 90 கிட்ஸ்களின் ஃபேவரைட் காமெடி நடிகர்களில் பலர் இருந்தாலும் செந்தில் கவுண்டமணிக்கு என்று நிச்சயம் அதிகமான ரசிகர்கள் இருப்பார்கள். அதுவும் இவர்கள் இருவரும் சமீபத்தில் அதிகமாக திரைப்படங்களில் நடிக்கவில்லையே என்று ரசிகர்கள் வருத்ததில் இருந்த நிலையில் இப்போது அந்த வருத்தம் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. சமீபத்தில் நடிகர் "கவுண்டமணி", "ஒத்த ஓட்டு முத்தையா" என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுபோல செந்திலும், யோகி பாபு உடன் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி இருக்கிறது. 2012 ஆம் ஆண்டு "கார்த்தி" நடித்து வெளியான "சகுனி" திரைப்படம் அரசியல் கலந்த நகைச்சுவை திரைப்படம். அதுவரைக்கும் கார்த்தி குண சித்திர வேடங்களிலும் நகைச்சுவை கேரக்டர்களிலும் நடித்திருந்தாலும் முதல் முறையாக அரசியல் ட்ரை பண்ணும் போது அது அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தது.

ஆனாலும் அது சராசரியான வெற்றியை பெற்றிருந்தது. இந்த நிலையில் அந்த திரைப்படத்தின் இயக்குனரான "சங்கர் தயாள்" 12 வருடங்கள் கழித்து இப்போது செந்தில் மற்றும் யோகி பாபு மற்றும் முன்னணி நகைச்சுவை நடிகர்களை வைத்து "குழந்தைகள் முன்னேற்ற கழகம்" என்ற திரைப்படத்தை இயக்குவதாக போஸ்டர் வெளியிட்டு உறுதி செய்து இருக்கிறார்.

இயக்குனர் சங்கர் தயாள் அரசியல், நகைச்சுவை திரைப்படங்களை இயக்குவதில் பெயர் போனவர் என்பதால் இவரது இந்த படத்திற்கு அதிகமான வரவேற்பு காணப்படுகிறது. அதே நேரத்தில் சமீபத்தில் நடிகர் விஜய் "தமிழக வெற்றிக் கழகம்" என்ற கட்சியை ஆரம்பித்து இருந்த நிலையில் அவருடைய கட்சியை கேலி செய்யும் முகமாக குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

குழந்தைகளோடு குழந்தைகளாக யோகி பாபு மற்றும் செந்தில் மாறி இருக்கும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதே நேரத்தில் யோகி பாபு தன்னுடைய twitter பக்கத்தில் இந்த போஸ்டை பகிர்ந்து இருக்கிறார். அதற்கு அதிகமானோர் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். அதுபோல நடிகர் செந்திலை பல வருடங்கள் கழித்து மீண்டும் திரையில் பார்க்க இருக்கும் நிலையில் இனி செந்தில் மற்றும் யோகி பாபுவின் கூட்டணி எப்படி இருக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X