Yogi babu: போட் பட பிரஸ் மீட்டில் யோகிபாபு சொன்ன நன்றி.. கேட்ட மன்னிப்பு.. என்ன காரணம்?
சென்னை: நடிகர் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ள போட் படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. பீரியட் படமாக சுதந்திரப் போராட்ட காலகட்டத்தை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர்.
சுதந்திர போராட்ட காலகட்டத்தில் சென்னையில் ஜப்பான் குண்டு போட உள்ளதாக கூறப்பட்ட சூழலில் அதிலிருந்து தப்பிக்கும் வகையில் 10 பேர் போட்டை எடுத்துக் கொண்டு நடுக்கடலுக்கு செல்வதாக இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிகச்சிறப்பாக மேற்கொண்டுள்ளார் சிம்புதேவன்.

போட் படம்: நடிகர் யோகி பாபு -சிம்புதேவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் போட். சுதந்திர போராட்ட காலகட்டத்தை மையமாக கொண்டு இந்தப்படத்தின் கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் சிம்புதேவன். படத்தில் யோகி பாபுவுடன் கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி ரிலீசாகவுள்ளதையொட்டி அடுத்தடுத்த பிரமோஷன்களில் சிம்புதேவன், யோகி பாபு, கௌரி கிஷன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் இணைந்து வருகின்றனர். இந்த படத்திற்காக பல்வேறு பேட்டிகளையும் யோகி பாபு கொடுத்து வருகிறார்.
பத்திரிகையாளர் சந்திப்பு: இந்நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்களை சந்தித்த சிம்பு தேவன், கௌரி கிஷன், மதுமிதா உள்ளிட்ட பலரும் படம் குறித்த தங்களது எக்ஸ்பீரியன்ஸை ஷேர் செய்து கொண்டனர். கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் சிம்புதேவனின் எட்டாவது படமாக போட் படம் உருவாகியுள்ளது. இதுகுறித்து பேசிய சிம்புதேவன் ஒரு படத்தை இயக்க ஆரம்பித்தால் அது முடியும் வரை அதிலேயே தான் மூழ்கி விடுவேன் என்று கூறியிருந்தார். இதுவே படங்கள் குறைவாக இருப்பதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
தாமதமாக வந்த யோகிபாபு: போட் படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பிரஸ் மீட்டில் யோகிபாபு கலந்து கொள்வார் என்று கூறப்பட்ட நிலையில் இரவு அனைத்து விஷயங்களும் முடிந்த பிறகு யோகி பாபு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதுகுறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் துளைத்து எடுத்து விட்டனர். ஆனால் அவர் பொறுமையாகவே பதில் கூறினார். கோவளத்தில் ஒரு படத்தின் சூட்டிங்கில் தான் மாட்டிக் கொண்டதாகவும் தன்னிடம் நேரம் குறித்து படக்குழுவினர் எதுவும் கூறவில்லை என்றும் வரும் வழியில் டிராபிக்கில் தான் மாட்டியதால் இந்த நேரத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மன்னிப்பு கேட்ட யோகிபாபு: கடந்து சில தினங்களுக்கு முன்பு குற்றாலத்தில் இருந்து சென்னைக்கு வந்து இந்த படத்தின் ப்ரோமோஷனில்தான் பங்கேற்றதாகவும் கூறியுள்ளார். இந்த படத்தை சாத்தியமாக்கிய சிம்பு தேவனுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். இதே போல பிரஸ் மீட்டில் தான் தாமதமாக பங்கேற்றதற்கு அனைவரிடமும் யோகிபாபு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். முன்னதாக இந்தப் படத்தின் டிரெயிலர், பாடல் உள்ளிட்டவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











