ஜூனியர் வந்தாச்சு.. அப்பாவானார் நகைச்சுவை நடிகர் யோகி பாபு.. ரசிகர்கள் வாழ்த்து மழை!
சென்னை: நடிகர் யோகி பாபு அப்பாவாகியுள்ளார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு.
பிஸியான நடிகரான யோகி பாபு, அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் ஒரு நடிகராகவும் இருந்து வருகிறார்.

இந்த ஆண்டு அதிக படங்கள்
இந்த ஆண்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னணி நடிகர்களின் படங்கள் பல ரிலீஸ் செய்ய முடியாமல் திணறி வருகின்றன. இருந்த போதும் இந்த ஆண்டு வெளியான பெரும்பாலான படங்களில் யோகி பாபு நடித்த படங்கள் அதிகம்.

டபுள் சந்தோஷம்
அதற்காகவே ரசிகர்கள் அவரை ஒரு பக்கம் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ஆண் குழந்தைக்கு அப்பாவாகி டபுள் சந்தோஷத்தில் உள்ளார் யோகி பாபு. நடிகர் யோகி பாபுவுக்கு நீண்ட ஆண்டுகளாக திருமணம் ஆகாமல் இருந்தது.

பிப்ரவரியில் திருமணம்
இது ஒரு பெரும் குறையாகவே இருந்தது அவரது ரசிகர்களுக்கு. எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் எப்போது கல்யாணம் என்பதே பிரதான கேள்வியாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி யோகி பாபு மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்தார்.

ரிசெப்ஷனுக்கு ஏற்பாடு
திருத்தணி முருகன் கோவிலில் மிகவும் எளிமையாக அவர்களின் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் பிரமாண்டமாக ரிசெப்ஷன் நடத்த திட்டமிட்டிருந்தார் யோகி பாபு.

குழந்தை பிறந்தது
இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அதைத் தொடர முடியவில்லை. இந்நிலையில் யோகி பாபு - மஞ்சு பார்கவி தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ரசிகர்கள் வாழ்த்து
இந்த தகவலை நடிகர் மனோ பாலா தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், நண்பன் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை... மிகவும் மகிழ்ச்சி... தாயும் சேயும் நலம்... என தெரிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











