மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் !
சென்னை : கொரோனாவாக்கு இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது என்று யோகி பாபு உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில். இந்தியா அவசரநிலையை அறிவித்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த சூழ்நிலையில் பலரும் வீட்டிலே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 900 தாண்டியுள்ளது. 20ற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் .

இந்நிலையில், யோகிபாபு வீடியோ ஓன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில், உருக்கத்துடன் இனி ஒரு உயிர் கூட போக கூடாது என்று கூறியுள்ளார் மேலும் அனைவரும் வீட்டில் இருங்கள் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு மோசமானது என்று வருந்தி கூறினார் .
மேலும் இந்த நேரத்தில் கடவுள் நம்மை காப்பாற்றுவார். மிகவும் தைரியமாக இருங்கள் என்று மக்களுக்கு மெல்லிய குரலில் ஆறுதல் கூறினார் யோகிபாபு. பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் உள்ள நிலையில் யோகிபாபு பேசி இருப்பது ஆறுதலாக உள்ளது.
யோகிபாபுவின் திருமண வரவேற்பு விழா வரும் வாரத்தில் நடக்கவிருந்த நிலையில். தற்போது அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரலுக்கு 14 பிறகு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை இன்னும் அதிக படியான கட்டுபாடுகளுடன் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அரசு எடுத்து வரும் முடிவுகளை கட்டாயம் ஏற்க வேண்டும் என்று பல பிரபலங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல பிரபலங்கள் தொடர்ந்து தங்களின் வீடியோ பதிவின் மூலம் இதனை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களை தாண்டி உங்களின் குடும்பத்துடனும் நேரத்தை செலவிடுங்கள் என்று வலியுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications