1250 கிலோ அரிசி.. நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு யோகி பாபு உதவி !
சென்னை : ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மூட்டையை வழங்கி உதவினார் யோகி பாபு.
Recommended Video
கொரோனா தொற்று உலகம் முழுவதும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொரானா வைரஸ் தொற்று பாதிப்பு இந்தியாவிலும் எதிர்பாராத அளவில் சரசரவென உயர்ந்து வருகிறது. இந்த நேரத்தில் சில அரசு ஊழியர்கள், காய்கறி வியாபாரிகள், சில அடிப்படை தேவையை பூர்த்தி செய்யும் வியாபாரிகளை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் தங்களின் வேலைகளை இழந்துள்ளனர் இதில் சினிமாத்துறையும் அடங்கும்.

சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் முழுவதுமாக முடக்கபட்டிருக்கிறது. இதனால், நடிகர்கள் முதல் தினகூலிகள் வரை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் சினிமா துறைக்காக பல முன்னணி நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை தங்களால் முடிந்த உதவி செய்து வருகின்றனர்.

ரஜினி , அஜித் ,சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்கள் வரிசையில் தற்போது நடிகர் யோகிபாபுவும் தன்னால் முடிந்த உதவியை செய்திருக்கிறார். இதில் யோகிபாபு நேரடியாக நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி வழங்கி உதவியுள்ளார் .

மொத்தம் 1250 கிலோஅரிசியை வாங்கியுள்ள நடிகர் யோகிபாபு அதை தற்போது கொரன்டைன் நேரத்தில் கஷ்டபட்டு வரும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கொடுத்துள்ளார். இதனை சில நடிகர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களின் துணையுடன் தானே முன்சென்று நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளார் .
பலரும் பணத்தின் மூலம் உதவி வரும் நிலையில் அரிசியாக யோகிபாபு உதவியிருப்பது பலரின் பாரட்டை பெற்றுள்ளது. ஏனெனில் பணத்தை சரியாக கொண்டு சேர்பதை விட உணவை எளிதில் உழைப்பாளிகளிடம் கொண்டு போய் சேர்த்திருப்பது அனைவரின் பாராட்டை பெற்று தந்துள்ளது.

இந்த மோசமான சூழ்நிலையில் யோகிபாபு மட்டுமின்றி பலரும் தங்களால் முடிந்த உதவியை வேலை இழந்தவர்களுக்கு செய்து வருகின்றனர். இது இப்போது மட்டுமல்ல இதற்குமுன்பே பல மோசமான சூழ்நிலை இங்கு ஏற்பட்ட போது பலரும் ஒன்றிணைந்து செயல்பட்டு உதவி செய்து மீண்டெழுந்தனர். அதே போல் கொரோனாவையும் எதிர்த்து மீண்டெழுவோம் என்ற நம்பிக்கையை பலர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











