"வீரமே வாகை சூடும்" படத்தின் டப்பிங்கை முடித்த யோகிபாபு!
சென்னை: நடிகர் விஷால் இப்பொழுது குறும்பட இயக்குனர் து பா சரவணன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் வீரமே வாகை சூடும்
ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து இப்பொழுது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் நடிகர் யோகிபாபு தன்னுடைய காட்சிகளின் டப்பிங்கை முடித்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது

எதிரிகளாக போட்டி போட்டு நடித்து
நடிகர் விஷாலுக்கு சக்ரா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றாலும் கடைசியாக வெளியான எனிமி மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது . இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவான எனிமி திரைப்படத்தில் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்திருந்தனர். நிஜத்தில் நண்பர்களாக இருந்தாலும் எனிமி படத்தில் எதிரிகளாக போட்டி போட்டு நடித்து பட்டையை கிளப்பி இருந்தனர். இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

வீரமே வாகை சூடும
இந்த நிலையில் அடுத்ததாக குறும் பட இயக்குனர் து பா சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் திரைப்படத்திற்கு வீரமே வாகை சூடும் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வீரமே வாகை சூடும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் மிரட்டியது. இதன் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டு குறுகிய காலகட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் முடிந்து இப்பொழுது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டியது
வீரமே வாகை சூடும் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்க யோகிபாபு, பாபுராஜ், அகிலன், ரவீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அதிரடி சண்டைக்காட்சிகள் நிரம்பிய ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் வீரமே வாகை சூடும் டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டது.

யோகி பாபு டப்பிங்கை முடித்தார்
ஆனால் எதிர்பார்த்தபடி படப்பிடிப்பை முடிக்க முடியாததால் இப்பொழுது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பை முடித்த படக்குழு இப்போது டப்பிங் வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில் முக்கிய வேடத்தில் நடிக்கும் யோகி பாபு தான் நடித்த காட்சிகளின் டப்பிங் பணிகளை முடித்த கையோடு படக்குழுவுடன் டப்பிங் ஸ்டூடியோவில் இருந்தவாறு புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











