twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடடே கோயில் யானைக்குக்கூட யோகிபாபுவை தெரிகிறதே.. யானையின் சுவாரஸ்யமான ரியாக்‌ஷன்!

    |

    சென்னை : நடிகர் யோகிபாபு சிறப்பான பல படங்களில் காமெடி நடிகராக களமிறங்கி அதகளப்படுத்தி வருகிறார்.

    காமெடி ஹீரோ கதாபாத்திரங்களிலும் இவர் நடித்து வருகிறார். இந்த கேரக்டர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    சந்தானத்தின் கவுண்டர் காமெடியை இவரும் பின்பற்றினாலும் தனக்கென தனிப் பாணியை இவர் கொண்டுள்ளார்.

     அன்புச்செழியன் சகோதரர் இல்ல வாசலில் 4 மணி நேரம் காத்திருப்பு..ஊழியர்களை எச்சரித்த ஐடி அதிகாரிகள் அன்புச்செழியன் சகோதரர் இல்ல வாசலில் 4 மணி நேரம் காத்திருப்பு..ஊழியர்களை எச்சரித்த ஐடி அதிகாரிகள்

    முன்னணி காமெடி நடிகர்

    முன்னணி காமெடி நடிகர்

    தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார் யோகி பாபு. காமெடியில் மட்டுமின்றி மண்டேலா, கூர்க்கா உள்ளிட்ட படங்களில் நாயகனாகவும் இவர் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். தொடர்ந்து கமல், ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

    அதிகமான படங்கள்

    அதிகமான படங்கள்

    தற்போது இவரது கைவசம் மெடிக்கல் மிராக்கள், பூமர் அங்கிள், கருமேகங்கள் கலைகின்றன போன்ற படங்கள் உள்ளன. தொடர்ந்து பிசியாக நடித்துவரும் யோகிபாபு, தற்போது மாஸ்டர் தினேஷுடன் இணைந்து லோக்கல் சரக்கு என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூரி வெளியிட்டிருந்தார்.

    கேரக்டர் ரோல்களில் ஆர்வம்

    கேரக்டர் ரோல்களில் ஆர்வம்

    காமெடி கேரக்டர்களில் யோகிபாபு அதிகமாக நடித்தாலும் இவரது குணச்சித்திர நடிப்பில் வெளியான மண்டேலா, பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் இவருக்கு சிறப்பான பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. இதனால் காமெடி கேரக்டர்களை காட்டிலும் கேரக்டர் ரோல்களில் அதிகமாக நடிக்க யோகி பாபு ஆர்வம் காட்டி வருகிறார்.

    யானைக்கு சல்யூட்

    யானைக்கு சல்யூட்

    ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் யோகிபாபு. இவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகமாக முருகன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதனிடையே கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ உப்பிலியப்பன் கோயிலில் யோகி பாபு சாமி தரிசனம் செய்துள்ளார். தொடர்ந்து கோயில் யானைக்கு அவர் சல்யூட் அடிக்க, யானையும் தும்பிக்கையை உயர்த்தி சல்யூட் செய்கிறது.

    வைரலான வீடியோ

    வைரலான வீடியோ

    இதன் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. மிகப்பெரிய காமெடி மற்றும் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்தாலும் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் மிகவும் எளிமையாக யோகிபாபுவை பார்க்க முடிகிறது.

    English summary
    Actor Yogi babu get blessings from Sri Uppiliyappan temple elephant
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X